Breaking News
recent

கத்தாரில் புதிய சட்டம் - சரியான நேரத்திற்கு சம்பளம் கொடுக்காவிட்டால் 6000 கத்தார் ரியால் அபராதம்!


உரிய நேரத்தில் நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத தொழில்வழங்குநர்களுக்கு 6,000 கட்டார் ரியால் (1,650 அமெ. டொலர்) அபராதம் விதிக்கப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு உரிய நேரத்திற்கு சம்பளம் பெறாத ஊழியர்கள் உடனடியாக தத்தமது தொழில் வழங்குநர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யலாம் என்று கட்டார் தொழிலாளர் ஆய்வுத் திணைக்களத்தின் தலைவர் மொஹம்மட் அலி அல் மீர் தெரிவித்துள்ளார்.


கட்டார் வர்த்தக துறையில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்குவதை இவ்வாண்டு இறுதிக்குள் உறுதிபடுத்துவதற்கான தொழிலாளர் மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அந்நாட்டில் சம்பள பாதுகாப்பு முறை (Wage Protection System- WPS) அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


கட்டாரில் 1.8 மில்லியன் வெளிநாட்டவர்களில் 85 வீதமானவர்களுக்கு இலத்திரனியல் முறையில சம்பளம் வழங்கப்படுகிறது. இம்முறையானது சுமார் 37,000 கம்பனிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது .

இந்த வருட இறுதிக்குள் அத்தொகையை நூறு வீதமாக உயர்த்துவதே எமது நோக்கம் என்று கட்டார் தொழிலாளர் ஆய்வுத் திணைக்களத்தின் தலைவர் மொஹம்மட் அலி அல் மீர் தெரிவித்துள்ளார்.


மிகுதியுள்ள 15 சதவீதத்தினர் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த 2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி கட்டாரில் சம்பளம் வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன. 


இங்கு பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களில் ஐவருக்கு ஒழுங்காக நேரத்திற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை.
கடந்த 12 மாதங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்காமல் தொழிலாளர் சட்டத்தை மீறியமை தொடர்பான 385 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தொழிலாளர் ஆய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், கடந்த செப்டெம்பர் மாதம் மின்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றிய 400 புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 4 மாதங்கள் சம்பளம் வழங்காமைத் தொடர்பான முறைப்பாடு கிடைத்தது எ்னறும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள காற்பந்து போட்டிக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளரின் உரிமைகள் பலவகையிலும் மீறப்படுவதாக வெளியான குற்றசாட்டுக்களையடுத்த அந்நாட்டு அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளரின் நலன் தொடர்பில் கூடிய கவனம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.