Breaking News
recent

மிஸ்வாக் செய்வதின் பலன்கள்...

உகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்) என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்படும் ஒரு செடி
உகாய் மரத்தின் காய் நெல்லைப் போல் நெல்லின் அளவினதாய் இருக்கும். அதன் நெற்று ஈரம் பட்டவுடன் வெடித்துச் சிதறும். இது மழையின் ஈர மண்ணில் காலூன்ற ஏந்தாய் அமையும். இதனை இக்காலத்தில் அம்மாம் பச்சரிசிச் செடி என்பர்.
உகாய் மரம் சிறுநீரகக் கல்லுக்கு எதிரான தன்மையைக் கொண்டது. முகம்மது நபியவர்கள் இதன் குச்சிகளையே பற்தூரிகையாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.   பல நூற்றாண்டுகளாகப் பற்தூரிகையாகப் பயன்படுத்தப்படும் இதனை உலக சுகாதார நிறுவனம் வாய்ச் சுகத்துக்கான சிறந்த பொருளாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது. இதில் ஏராளமான மருந்துப் பொருட்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன
நபி(ஸல்) அவர்கள், பல் துலக்குவதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக ஒளூ செய்யும் போது பல் துலக்குவதை மிகவும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
பல் துலக்கல்

ஆயிஷா (ரழி) கூறுவதாவது:’நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள்.

அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார்.

அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்.

அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். ‘நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?’ என்று கேட்டபோது, ‘ஆம்!’ என தலை அசைத்தார்கள்.

அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. ‘நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?’ என்று கேட்டேன். தலை அசைத்து ‘ஆம்!’ என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.

 இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: ‘நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள்.

அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள்.

 லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன’ என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

329. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள்.

 ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள். புஹாரி : 3406 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பற்சுத்தம் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் வலியுருத்தியுள்ளார்கள்.


பல நோய்களுக்கு பல் காரணமாக இருக்கிறது.

பல்லை சுத்தம் செய்வதுவாயை சுத்தப்படுத்துவதுடன் இறைவனின் பொருத்தத்தையும் தரும்என்பது நபிமொழி.

.எவ்வாறு மிஸ்வாக் செய்வது?
143-நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் சென்றிருந்தேன் அப்போது அவர்கள் தமது கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கும் போது உவ், உவ் என்று சொல்வதை நான் கண்டேன்.


குச்சியோ அவர்களது வாயில் இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போல் இருந்தது.
புகாரி-244: அபூ முஸா அஷ்அரி (ரலி)
பற்சுத்தம் உடல் பரிசுத்தத்தின் ஒரு பகுதி.

குச்சி கொம்புகளால் பல்லை சுத்தம் செய்ய வேண்டும். இதை மிஸ்வாக் என்கிறோம்.

ஒருவர் உறங்கி எழுந்ததும் பல்லை துலக்க வேண்டியது அவசியம். நான் உங்களுக்கு மிஸ்வாக் செய்வது குறித்து அதிகமே கூறியிருக்கிறேன்.என்று நபிகளார் கூறுவதிலிருந்து பல் சுகாதாரத்துக்கு அவர்கள் அளித்துள்ள முக்கியத்துவம் புலப்படுகிறது.

 பெருமானார் பகலிலோ இரவிலோ உறங்கிவிழித்த பின்பு மிஸ்வாக் செய்யாமல் இருந்ததில்லை என்று ஆயிஷா நாயகி தெரிவித்திருக்கிறார்கள்.

உறங்கி விழித்த பின்னரும் உணவு உட்கொண்ட பின்னரும் பல்லை சுத்தம் செய்யவேண்டும். தொழுகை சொர்கத்தின் திரவு கோளாக இருக்கிறது.

தொழுகையின் திரவு கோள் பரிசுத்தமாக இருக்கிறது என்பது நபி மொழி. பல் குச்சி அல்லது பிரஷ் உபயோகிப்பது பல்லையும் வாயையும் சுத்தப்படுத்துகிறது.

பல் சுத்தமாக இருப்பின் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து.

மிஸ்வாக்கின் சிறப்புகள் ,
மிஸ்வாக் செய்வது சுன்னத் ஆகும்.


மிஸ்வாக் செய்து தொழுகும் தொழுகை மிஸ்வாக் செய்யாமல் தொழுகும் தொழுகையை விட எழுபது மடங்கு சிறந்ததாகும்.

பற்களில் உள்ள பாக்டிரியா கிருமிகளை அழிக்கிறது

பல்கறைகளை நீக்குகிறது  ,வாயை சுத்தப்படுத்துகிறது

அல்லாஹ்வின் திருப்திக்கு காரணம் ஆகிறது  ,ஷைத்தானுக்கு கோபத்தை உண்டாக்குகிறது.

பல் ஈறுகளுக்கு சக்தி அளிக்கிறது

 சளியை நீக்குகிறது

வாயின் துர்நாற்றத்தை போக்கி நறுமணத்தை அளிக்கிறது

பித்தத்தை போக்குகிறது

 பார்வையை கூர்மை ஆக்குகிறது.

இவை அனைத்தையும் விட இது ஒரு சுன்னத் ஆக இருக்கிறது .
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.