அன்பான வாசகர்களுக்கு இந்த வலைத்தளத்தில் ஒன்று அல்லது இரண்டு செய்திகள் மட்டும் வருகிறதா தாங்கள் பழைய இடுக்கைக்கு சென்று செய்திகள் பார்க்கவும்..... ...

6-7-15

சவுதி அரேபியாவில் தப்பி ஓடிய தீவிரவாதி சுட்டுக்கொலை.!


சவுதி அரேபியாவில் மெக்கா மாகாணத்தில் உள்ள டேய்ப் நகரில், ஒரு வீட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவு தகவல்கள் கிடைத்ததின் பேரில், போலீசார் அந்த வீட்டை கடந்த வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்தனர். 

அங்கு 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர். ஏராளமான தளவாடங்கள் கைப்பற்றப்பட்டன.

இருப்பினும் யூசுப் அப்துல் லத்தீப் ஷபாப் என்ற தீவிரவாதி மட்டும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்.

அவர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, அவரை சரண் அடையுமாறு கூறினர். 

ஆனால் அவர் சரண் அடைய மறுத்து போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார். போலீசாரும் திருப்பி சுட்டனர்.

இறுதியில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறுகிய கால விமான கட்டணச் சலுகை: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு.!


நடுத்தர ஏழை மக்கள் விமான பயணம் மேற்கொள்ளும் வகையில் குறுகிய கால விமான கட்டணச் சலுகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்கியுள்ளது.

மும்பை-கோவா, அகமதாபாத்-மும்பை, பெங்களூர்-ஹைதராபாத், சென்னை-பெங்களூர், புனே-பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு வெறும் 1,899 ரூபாயில் பயணம் மேற்கொள்ளலாம். 

இந்த அதிரடி கட்டணச் சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்று இரவு தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இரவு 12 மணி வரை இச்சலுகை அமலில் இருக்கும்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வெப்சைட், இணையதளங்கள் மற்றும் விமான பயண முகவர்கள் மூலம் இக்கட்டணச் சலுகை டிக்கெட்டுகளை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். 

விமான நிலையங்களில் இச்சலுகை கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படமாட்டாது. டிக்கெட் பெற்றவர்கள் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதிக்குள் விமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலி நினைவாக பவித்ராவுக்கு அனைத்து உதவிகளும் செய்தேன்: அடைக்கலம் கொடுத்த வாலிபர் தகவல்.!


மாயமான  பவித்ராவை  மீட்க அவரது செல்போன் எண்ணை போலீசார் கண்டு பிடித்து அதில் பதிவான அழைப்புகளை சோதித்தனர். இதில் ஒருவருக்கு மட்டும் அடிக்கடி பேசியது தெரிந்தது.

அத்துடன் அரக்கோணம் முகவரிக்கு செல்போன் இணைப்பு பெற்றதும் தெரிய வந்தது.

 இதையடுத்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி அரக்கோணம் உப்புக்குளம் பஜனை கோவில்  தெருவை  சேர்ந்த சரவணன் (23) என்ற வாலிபரை பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சுரேந்தர் என்பவர் செல்போனில் இருந்து பவித்ராவுக்கு அடிக்கடி அழைப்பு வந்தது தெரிந்தது.

இதையடுத்து கிண்டியில் இருந்த சுரேந்தரை பிடித்து பவித்ரா குறித்து விசாரித்ததில் அம்பத்தூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்கிறார். 

அவரை பெண்கள் விடுதியில்  நான் தங்க  வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

உடனே விடுதிக்கு போலீசார் சென்று பவித்ராவை கண்டுபிடித்து வேலூர் கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சுரேந்தர் கூறியதாவது:–

நான் சென்னையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறேன். கடந்த மே மாதம் இறுதியில் அரக்கோணத்தில் உள்ள நண்பர் சரவணனை பார்த்து விட்டு சென்னைக்கு கோவை எக்ஸ்பிரஸ்  ரெயிலில்  இரவு 9 மணிக்கு சென்றேன்.

அதே ரெயிலில் ஒரு அழகான பெண் வந்தார். அவர் தான் பவித்ரா என்பது பிறகு தெரிந்தது. ரெயிலில் சென்னை வரை கண் கலங்கிய படியே வந்தார். 

அப்போதே அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ரெயிலில் சக பயணிகள் இருந்ததால் கூச்சப்பட்டு பேசவில்லை. 

பின்னர் சென்னை சென்ட்ரலில் இறங்கிய பிறகு  சொந்த ஊரான திண்டுக்கல் செல்ல கோயம்பேடு பஸ் நிலையம் சென்றேன். அங்கு  பவித்ரா  தவித்து கொண்டிருந்தார்.
ரெயிலில் பார்த்த அதே பெண் இங்கு நள்ளிரவில் நிற்கிறாரே என்று பேச்சுக் கொடுத்தேன். 

அப்போது எனக்கு வயது 23 ஆகிறது. என்னுடைய தாய்மாமனுக்கு 42 வயதாகிறது.  அவருக்கு  என்னை கட்டாய  திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்கள். 

அந்த திருமணம் எனக்கு பிடிக்காததால் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் என்றார்.
இப்போது எங்கு தங்குவீர்கள் என்று கேட்டதும் அது தான் தெரியவில்லை என்றார். 

இதையடுத்து அந்த இரவை பஸ்சிலேயே கழிக்க நினைத்து புதுச்சேரிக்கு அவரை அழைத்து சென்றேன்.  மீண்டும்  அங்கிருந்து சென்னை  வந்தோம்.

நான் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உடைகளை மாற்றிக் கொண்டு அம்பத்தூரில் பெண்கள் தங்கும்  விடுதியில்  என்னுடய செலவில் சேர்த்து விட்டேன். 

மேலும் நண்பர்கள் உதவியுடன் அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலைக்கு சேர்த்தேன்.  இரவு நேரங்களில் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம்.

நான் கல்லூரியில் படிக்கும் போது பவித்ரா என்ற பெண்ணை காதலித்தேன். இவர் பெயரும் பவித்ரா என்பதாலும் என்னை கவரும் வகையில் அழகாக இருந்ததாலும் காதலி  நினைவாக  உதவி செய்தேன். 

போலீஸ் இவரை தேடுவது எனக்கு தெரியாது.இவ்வாறு சுரேந்தர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

ஆம்பூர்–வாணியம்பாடியில் 144 தடை உத்தரவு: வன்முறையை தடுக்க நடவடிக்கை.!


ஆம்பூர்  கலவரம்  தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை பல்வேறு கட்சியினர் பார்வையிட வந்தனர். ஆனால் அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த  நிலையில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது வருகிற 15–ந்தேதி (புதன்கிழமை) வரை 10 நாட்கள் அமலில் இருக்கும் என திருப்பத்தூர் உதவி கலெக்டர் ரங்கராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை நடத்தக்கூடாது. 4 பேருக்கு மேல் கூட்டமாக நிற்கக் கூடாது.

இந்த  உத்தரவை  தொடர்ந்து ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் போலீசார் ரோந்து வந்து  தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மூலம் கண் நோய்களை கண்டறியும் புதிய வசதி அறிமுகம்.!


கண்களில் ஏற்படும் தொற்று மற்றும் கண் நோய்களை ஸ்மார்ட்போன்கள் மூலமாக கண்டறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஸமார்ட்போன்களில் உள்ள கேமரா மூலம் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி கண் தொற்றுகளை கண்டறிய முடியும்.

அபுதாபியில் உள்ள மஸ்ஜிதுகளில் ஒலிக்கும் அழகிய, மென்மையான ” பாங்கிற்கு ” சொந்தக்காரர் ஒரு ” மலையாளி..!” அபுதாபியில் உள்ள 1000 மஸ்ஜிதுகளில் ஒலிக்கும் அழகிய, மென்மையான ” பாங்கிற்கு ” சொந்தக்காரர் ஒரு ” மலையாளி ஆவார்!  அல்ஹம்துலில்லாஹ்!

அபுதாபி சேக் ஸைத் பெரிய மஸ்ஜிதில் (” THE ABUDHABI GRAND MASJITH “) புகழ் பெற்ற, அழகிய பாங்கு ( ADHAN – CALLING FOR PRAYER) முழங்கும் கேரளா ( KERALA – INDIA) மாநிலத்தில் உள்ள திருச்சூர் குன்னங்குளத்தை ( TIRUSUR – KUNNAMKULAM)

 சேர்ந்த ஜனாப் அஹ்மது நஸீம் மாதவி ( AHMAD NASEEM MATHAVI) அவர்கள் மாத்ருபூமி தொலைக்காட்சிக்கு ( MATHRUBOOMI – NEWS) அளித்த பிரத்தியோக பேட்டி ( SPECIAL INTERVIEW)!

அழகிய, மென்மையான ( SWEET AND SOFT ADHAN) குரலுக்கு சொந்தக்காரரான கேரள சகோதரருக்கு துஆ செய்வோமாக!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒன்றரை இலட்சம் கோடி மக்கள் பணத்தை மோடி கூட்டம் கொள்ளையடித்திருப்பது அம்பலம் ..!


பிஜேபி தலைவர்கள் தங்களை பரிசுத்தவான்களாக சித்தரித்து வந்தனர் மோடி அரசின் ஓர் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய மோடி நாங்கள் ஊழல் அற்ற அரசை நடத்துகிறோம் என தம்பட்டம் அடித்தார்

அவர் பேசி முடித்த மறு நாளே ஊழல் மன்னன் லலித் மோடியுடன் சுஸ்மா சுவராஜின் கள்ள உறுவுகள் வெளிச்சத்திர்கு வந்தது 

அதனை தொடர்ந்து மகாராஸ்றிரா பிஜேபி அரசின் ஊழல்களை மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டின

தர்போது மத்திய பிரதேசத்தில் கல்விதுறையில் பாஜகவினர் இமாலாய ஊழல் புரிந்திருப்பதும் அதர்காக பலர்களை கொலை செய்திருப்பதும் அம்பலமாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது 

எல்லாற்றையும் விட மேலக சத்திஸ்கர் மாநில பாஜகவினர் அரிசி கொள்முதலில் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது அம்லமாகி இருப்பது நாட்டு மக்களை அதிர வைத்திருக்கிறது 

நல்லவன் என்று எண்ணி கொள்ளை கூட்டத்திடம் நாட்டை ஒப்படைத்து விட்டோமே என மக்கள் உண்மையாகவே சிந்திக்க தொடங்கி விட்டனர்

5-7-15

திருச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கலந்துகொண்ட இஃப்தார் நிகழ்ச்சி.!


தமிழகத்தில் பல இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் உள்ளன.

 இதில் பல இயக்கத்தினர் மற்ற இயக்கத்தினரோடு ஒற்றுமை எனும் கயிற்றை தவறி வருகின்றனர். 

இதனை ஒன்றுசேர்க்கும் வகையில் திருச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுகூடும் இஃப்தார் நிகழ்ச்சி திருச்சி ரோஷன் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  பல இஸ்லாமிய இயக்கங்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுனர். 

மக்காவில் ஹஜ்ஜாளிகளுக்கு புதிய கார் வசதி.!


மக்காவில் ஹஜ்ஜாலிகளுக்கான புதிய ஏற்ப்பாடு. பேருந்து நிலையம் முதல்  மஸ்ஜிதுல் மர்வா மற்றும் சாபா விர்க்கு காரில் பயணம் செய்வதற்க்கான வசதி மற்றும் மஸ்ஜிதுல் ஹரம் வரை
செல்வதற்காக விரைவில் செயல் படுத்தபட உள்ளது .

(நெகிழ்ச்சி வீடியோ இணைப்பு) Florida நீதிமன்றில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம்.!


அண்மையில் Florida வில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் நடந்திருக்கின்றது.

ஒரே வகுப்பில் படித்த இருவர் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள் ஒருவர் நீதிபதியாக,மற்றவர் குற்றவாளியாக.

தீர்ப்பு வழங்குமுன்அங்கிருந்தபெண் நீதிபதி நீங்கள் Nautilus Middle என்ற கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்த நண்பர்தானே என்று குற்றவாளியுடன் அறிமுகமாகின்றார்.

தனது பாடசாலை நண்பிதான் நீதிபதி என்று அறிந்து கொள்ளும் குற்றவாளி கண்ணீர்விட்டு அழுகிறார்.

பின்னர் அந்த பெண் நீதிபதி :உங்களை இப்படி சந்திக்கக் கிடைத்ததை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.

எமது கல்லூரியில் இருந்த சிறந்த Foot Ball வீரர் இவர். கல்லூரிக் காலத்தில் மிகத் திறமையான மாணவர் என்று அந்த குற்றவாளி நண்பரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் நீதிபதி.

அதோடு உங்களது பாதையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி தனது நண்பருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஒரு நல்ல நிலமைக்கு வந்ததும் ஒன்றாக இருந்த நண்பர்களை கண்டும் காணமல் இருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு நீதிபதியாக இருந்து 

கொண்டு ஒரு குற்றவாளியை தனது நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்த அந்த பெண் நீதிபதியின் பன்பு அழகானது.

வீடியோ பார்க்க
http://m.huffpost.com/us/entry/7723406

முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து கொடுத்த நடிகர் விஜய்.!


ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருவார்கள். 

இவ்வாறு நோன்பு இருந்து வருபவர்களுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு இப்தார் விருந்து அளித்து, அவர்களுடன் விருந்தில் கலந்துக் கொள்வார்கள்.

அந்த வரிசையில் விஜய் தற்போது ரம்ஜானை முன்னிட்டு 100 இஸ்லாம் சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்திருக்கிறார். 

அவர்களுக்கு விருந்து கொடுத்ததுமில்லாமல் அவர்களுடன் அமர்ந்து விருந்தில் கலந்திருக்கிறார்.

சவூதி அரேபியாவில் வாகண விபத்தில் 7 பெண்கள் மரணம்.!


இன்று சவூதி அரேபியா அல்கஸீமில் நடைபெற்ற வாகண விபத்தில் யேமன் நாட்டைச் சேர்ந்த 7 பெண்கள் மரணமடைந்துள்ளதுடன் இன்னும் 5 பேருக்கு கடுமையான காயம் பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அரச வீசா பெற்று இன்றுதான் சவூதிக்குள் நுழைந்தார்கள் என்பது கூறக்தக்கது.

புனித பயணிகளை வெப்பத்திலிருந்து பாது காக்க water spray செய்யும் மக்காவின் காவல் துறை..!


மக்க உள்ளிட்ட சவுதி அரேபியாவின் பல நகரங்களை வெப்பம் வாட்டி வதைக்கிறது கடுமையான வெப்பத்திர்கு இடையே கடமையான நோன்பையும் மக்கள் நோற்று வருகின்றர்

இந்த நிலையில் மக்காவில் வரும் புனித பயணிகளை வெப்பத்தில் இருந்து பார் காக்க water spray செய்யும் பணியை மக்காவின் காவல் துறை ஆரம்பித்திருக்கிறது 
அந்த காட்சியைதான் படம் விளக்குகிறது

சஹர் உணவு உட்கொண்டு நோன்பு நோற்ற திருமாவளவன்....!!


சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ஜும்ஆ பள்ளியில் இன்று அதிகாலை 3 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னணி தலைவர் ப.அப்துல் ரஹ்மான் அவர்களும், 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் ஒன்றாக அமர்ந்து சஹர் உணவு உட்கொண்டு நோன்பு வைத்த உன்னத நிகழ்வு....

பொதுவாக அரசியல்வாதிகளை பொறுத்தவரை நோன்பு நோற்காமலேயே இஃப்தார் என்னும் புனித நிகழ்வை அரசியலுக்காக பயன்படுத்தி இஃப்தாரின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள்.

நோன்பு வைக்காமலேயே இஃப்தாரில் கலந்து கொள்வது நோன்பாளியின் புனிதத்தையும், நோன்பின் மாண்பையும் கெடுப்பதற்கு சமம்,

அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் மிகவும் மாறுதலாக நானும் உங்களுடன் நோன்பு நோற்கிறேன் என்று அதிகாலை 3 மணிக்கு சஹர் உணவு உட்கொண்டு முழுமையாக நோன்பு நோற்கும் உன்னத மனிதர் திருமாவளவன்,

இந்த ஆண்டுமட்டுமல்ல, பல ஆண்டுகளாக திருமாவளவன் நோன்பு நோற்று வருகிறார்.

சஹர் உணவு உட்கொள்வதர்காக திருமாவளவன் பள்ளிவாசலுக்கு வந்தார், பள்ளிவாசலில் இருந்தவர்கள் திருமாவளவனுக்கு சாப்பாட்டுடன் அன்பு பாசத்தையெல்லாம் பரிமாறிய விதம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது,

சாதிய மதவாத சக்திகள் பார்த்திருந்தால் நிச்சயமாக எண்ணியிருப்பார்கள் சாதி செத்து விட்டதோ சமத்துவம் வென்று விட்டதோ என்று.... 

ஷமில் அகமதுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை: பவித்ரா பரபரப்பு பேட்டி.!ஆம்பூர் கலவரம் தொடர்பாக பிடிபட்ட பெண் பவித்ரா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், உயிரிழந்த ஷமில் அகமதுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குச்சிபாளையத்தைச் சேர்ந்த கே.பழனி என்பவர் மனைவி பவித்ரா காணாமல் போன வழக்கில் ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகானின் மகன் ஷமில் அஹமத் (26) என்பவரை விசாரணைக்க்கு போலீஸார் கடந்த 15ம் தேதி அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் ஷமில் அஹமத் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது 

மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஷமில் அஹமத் கடந்த மாதம் ஜூன்.26 (வெள்ளிக்கிழமை) மாலை இறந்தார்.

இதைக் கண்டித்தும், அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் 130-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில், ஷமீல் அகமது வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், வேலூர் மாவட்டம் வள்ளிமலை அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பவித்ராவை, நேற்றிரவு தனிப்படை போலீஸார் சென்னையில் கண்டுபிடித்தனர்.

அவரை ராணிப்பேட்டை மேல்பாடி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார், இத்தனை நாள் தலைமறைவாக இருந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, பவித்ராவை வேலூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் மகளிர் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

பின்னர் செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில், தனக்கும் ஷமில் அகமதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

நன்றி:தினமணி

இஸ்லாமிய சமூகத்தினரை ஆத்திரமூட்டிய வாட்ஸ் அப் புகைப்படம்: போலீஸ் நிலையம் மீது தாக்குதல்.!


உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் இஸ்லாம் மதத்தை தவறாக சித்தரிக்கும் புகைப்படம் வாட்ஸ் அப்பில் வெளியானதை கண்டித்து அங்குள்ள காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாகபானி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமான புகைப்படம் ஒன்றை தமது வாட்ஸ் அப்பில் இருந்து பலருக்கும் அனுப்பியுள்ளார்.

 இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமி்யர்கள், புகைப்படத்தை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாகபானி காவல் நி்லையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆவேசமடைந்த சிலர் காவல்நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த காவல்துறை அதிகாரிகள், போலீஸ் படையுடன் வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். 

இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் தீபக் அகர்வால் கூறியதாவது, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை பரப்பிய நபரை கண்டறியும் பணியில் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

குற்றவாளி கைது செய்யப்பட்டால் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 நாகபானி பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அசம்பாவிதங்கள்ஏற்படாதவண்ணம் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் 'ஈ': பயணி புகார்..!


காத்மாண்டுவில் இருந்து கொல்கத்தா வந்த ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ஈ இறந்து கிடந்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று சனிக்கிழமை கொல்கத்தாவுக்கு கிளம்பியது. 

அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் ஈ இறந்து கிடந்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ஏர் இந்தியா கூறுகையில்,
உணவில் ஈ இருந்ததாக கூறிய பயணி அதை சோதனைக்காக அளிக்கவில்லை.

 ஈ இருந்ததா என்பதை கண்டறிய அந்த உணவை திருப்பி அளிக்குமாறு கேட்டும் பயணி அளிக்கவில்லை. அதனால் உணவில் ஈ இருந்ததை உறுதிப்படுத்த முடியாது என்றது.

முன்னதாக கடந்த மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் உணவில் பல்லி கிடந்ததாக புகார் எழுந்தது. 

ஆனால் அந்த புகார் பொய் என்று ஏர் இந்தியா அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி முகநூலில் முகத்தை மறைக்க முடியாதே.!


முகநூலில் பக்கத்தில் உள்ள பலர் தன் முகத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக கொஞ்சம் தெளிவு இல்லாமல் அல்லது முகத்தை மட்டும் மறைத்து போட்டோக்களை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

இப்படி முகநுால் பக்கத்தில் வரும் தெளிவில்லாத போட்டோக்களை மிகத் தெளிவாக, இவர் யார் என்று அடையாளம் காட்டும் தொழில்நுட்பத்தை அடுத்த மாதம் முதல் முகநுால் பக்க நிர்வாகம் புகுத்த உள்ளது.

இதை முகநூல் நிர்வாகத்தின் , ‘பேஸ்புக் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் டீம்’ நேற்று அறிவித்துள்ளது. 

இதன் மூலம் பேக் ஐடி எனப்படும் முகநூல் பக்கத்தில் போலியான பக்கத்தைப் பராமரிக்கும் நபர்கள், அல்லது ஏமாற்று கணக்குகள் பெண்களின் போட்டோவைத் திருடி அதில் தலையை மட்டும் வெட்டியெடுத்து மார்பிங் செய்து தவறான சைட்களில் அரேங்கேற்றுவது, 

தன் முகத்தை மட்டும் மறைத்து அல்லது அதில் கருப்புத் தடவும் நபர்கள், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஆகியோரை இந்தத் தொழில்நுட்பம் தெளிவாக அடையாளம் காட்டும் என்று இந்த டீம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதை உடல் / நிறம் / உடை போன்ற 100 வகை காம்பினேஷன்களை உள்ளடக்கித் தயாரித்த இந்த மென்பொருள், ப்ளிக்கர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட 37 ஆயிரம் போட்டோக்களை பயன்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதில், 87% ரிசல்ட் சரியாக கிடைத்தது. இதையடுத்து, இந்த மென்பொருளை முகநுால் பக்கத்தில் பயன்படுத்த அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 இதனால், முகநூலில் முகம் தெரியாமல் இருக்கும் நிறைய முகம் மறைக்கபட்ட போட்டோக்களின் சரித்திரம் பூகோளம் இனிமேல் பப்ளிசிட்டியாகிவிடும் என்பதுதான் உண்மை.