Breaking News
recent

ஹஜ் புனித பயண விபத்து ‘சவுதி மன்னிப்பு கேட்க வேண்டும்’ ஈரான் வலியுறுத்தல்.!


மெக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்டிருந்த இஸ்லாமியர்கள், அங்கு மினா நகரில் உள்ள சாத்தான் சுவரில் கல் எறியும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பெருமளவில் ஜன நெரிசல் ஏற்பட்டது. 

இதில் 769 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், உலகமெங்கும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது.அது தொடர்பாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த பிரச்சினையை மறந்து விட முடியாது. 

இதை நாடுகள் தொடர்ந்து தீவிரமாக கருதுகின்றன. இதில் குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு, சவுதி பொறுப்பை ஏற்றுக்கொண்டு, முஸ்லிம்களிடமும், பலியானவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் குடும்பங்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என கூறினார்.

மேலும் அவர்கூறும்போது, ‘‘இந்த சம்பவத்தில் இஸ்லாமிய உலகம் ஏராளமான கேள்விகளை வைத்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியான விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொண்டு விட முடியாது. 

இதில் முஸ்லிம் நாடுகள் கவனத்தை செலுத்த வேண்டும்’’ என்றார்.இந்த ஜனநெரிசல் சம்பவத்தில் பலியானவர்களில் 144 பேர் ஈரானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.