Breaking News
recent

வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கட்டுரைப்போட்டியில் முதல் இடம்


பெரம்பலூர் மாவட்டத்தில் புனித தேமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.

போட்டியில், பெரம்பலூர் மாவட்டப் பள்ளிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் சு. தம்புசாமி முன்னிலையில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி இரா. கலைவாணி முதல் இடத்தையும்,

 பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவி ப.ஷெக்கிலா குல்மான் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

கட்டுரைப் போட்டியில் வி. களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஷா. நஜிமுன்னிஷா முதல் இடத்தையும்,

லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ப. பாமிதாபாணு இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

பேச்சுப் போட்டியில், பெரம்பலூர் மெüலானா மேல்நிலைப்பள்ளி மாணவன் சி. அலிமுதீன் முதல் இடத்தையும்,

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி து. வான்மதி இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட உள்ளது.

ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் ராசு, பாலசுப்ரமணியன், சங்கரன், நல்லாசிரியர்கள் சேக்தாவூத், சுந்தரம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் கோ. பத்மாவள்ளி, பா. சிலம்பரசன், வேப்பூர் பள்ளி தமிழாசிரியர் மு. மகாலட்சுமி, மருவத்தூர் பள்ளி தமிழாசிரியர் இரா. ரமணி, குரும்பலூர் பள்ளி தமிழாசிரியர் செ. மணிமேகலை ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.