லால்பேட்டை யில் கடந்த சில வாரங்களுக்கு முன் முகநூலில் ஆறுமுகம் என்பவர் இஸ்லாமியர்களையும் முஸ்லிம் பெண்களையும் ,இஸ்லாமிய கொள்கைகளையும் தகாத வார்த்தைகளை உபயோகித்து
இந்து முஸ்லிம் களின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்டதை ஊர் மக்கள் காவல் துறை கவனத்திற்கு எடுத்து சென்று முறையிட்டனர் கலவரம் தூண்டும் வகையில் ஆறுமுகத்தின் பதிவு இருந்ததையடுத்து அவர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்தனர்.
தற்பொழுதுஜாமீனில் வெளி வந்துள்ள ஆறுமுகம் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தீ வைக்கப்பட்டதாக நாடகமாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்துலால்பேட்டை தெற்கு தெருவை சார்ந்த முஹம்மது யஹ்யாவின் மகன் மசூது அஹமது (25) என்பவர் எந்தவித விசாரணையும் இன்றி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மசூது அஹமது வை விடுவிக்க கோரியும் இன்று இரவு 7 மணிக்கு லால்பேட்டையில் பொதுமக்களும் தமுமுக வினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதில் சகோதர சமுதாயத்தினருடன் ஊரே திரண்டு கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரி வலியுறுத்தினர்.
இந்நிலையில் லால்பேட்டை அருகில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ம.ம.க மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது சம்பவ இடத்திற்கு வந்து லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
செய்தி அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.ஏ.எம்.அபூபக்கர் எம்.எல்.ஏ சென்னை டி.ஜி.பி.அலுவலகத்தில் உளவுத்துறை டி.ஐ.ஜி திரு ஈஸ்வர மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து பொய் வழக்கில் கைது செய்யப்பட இளைஞரை விடுவிக்க கூறியதுடன் அமைதி ஏற்படுத்தித்தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டானர்.



source:Lalpet Exclusive.tk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக