Breaking News
recent

திருப்பூர் ரயில் நிலையத்தில் வட மாநில பெண்கள் தவிப்பு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு.!


மத்திய பிரதேச சிங்குபுரில் வசிக்கும் 50 பெண்கள் கரூர் கே வேன்சர்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி உள்ளனர் அவர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்காமல் நேற்று நிறுவனம் வெளியேற்றி உள்ளது.

செய்வது அறியாமல் திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு முதல் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் தவிர்த்து கொண்டு இருந்து உள்ளனர் இப்படி இருக்கும் செய்தி திருப்பூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் இடத்தில் வந்த உடனே கூட்டமைப்பு தலைவர் மஜித் பொது செயலாளர் யாசர் பொருளாலர் தஸ்தகீர் பாப்புலர் பிரண்டு மாவட்ட செயலாளர் முபாரக்

இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தமுமுக மாநில நிர்வாகி ஹாலிதின் மாவட்ட செயலாளர் நசிர்தீன் மமக மாவட்ட செயலாளர் மு�ஜி ஜாக் அமைப்பு பாபு வஹ்தே இஸ்லாமி மாவட்ட செயலாளர் இக்பால் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முஸ்தபா 

இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட துணை செயலாளர்கள் சேக் பரித் சேக் ஒழி எஸ் டி பி ஐ தெற்கு தொகுதி செயலாளர் அபூ மற்றும் நிர்வாகிகள் நேரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று அவர்கள் நிலை குறித்து பத்திரிகையாளர் இடத்தில் கூறி விட்டு கூட்டமைப்பு சார்பில் அனைவருக்கும் சொந்த மாநிலத்திற்கு செல்ல டிக்கெட்   உணவு வசதி செய்தி கொடுத்து  சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.





VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.