ஆமாம், இது, உண்மையிலேயே கண்களைக் குளமாக்கும் புகைப்படம் தான்.அந்த ஏழைச் சிறுமி எதைத் தேடுகிறாள்? தங்க நகைகளையா? இல்லை அவளுக்குத் தெரியும் அவையெல்லாம் ‘லாக்கரில்’ பூட்டப்பட்டிருக்கும் என்று, பிறகு? பணம் – காசு?? இல்லவே இல்லை அதுவும் அவளுக்குத் தெரிந்திருக்கும் ஸ்விஸ் வங்கியில் வண்ணம் மாற்றப்பட்டிருக்கும் என்று.
இதுபோன்ற வறுமை தாக்கிய சிறுவர்கள் பெரும்பாலும் தேடுவது உடைகளாக இருக்கும், விளையாட்டுப் பொருள்களாக இருக்கும் அல்லது புத்தகங்களாக இருக்கும்.
சரி, நம்மில் எத்தனை பேர் மேற்சொன்ன பொருள்களை குப்பைத்தொட்டியில் போடுகிறோம்? அல்லது இல்லாதோருக்குக் கொடுக்கிறோம்?? பெரும்பாலும் பழைய துணிமணிகள் பாத்திரங்களாக உருமாறி நிற்கும். புத்தகங்கள் பொரி-கடலை மடிக்கப் போய்விடும்.
இங்கு, அரசின் அறநிலையத்துறை அமைச்சகம் செய்யும் பணிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, நீங்கள் படத்தில் பார்ப்பது போன்ற CLOTH BOX என்ற பெட்டிகளைத் தயாரித்து, வழிபாட்டுத்தலங்களின் வாயில்கள், குடியிருப்புப் பகுதிகள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. புத்தங்களைச் சேகரிப்பதற்கென இதேபோல் வேறொரு பெட்டி வைக்கப்பட்டிருக்கும்.
குடும்பத்தினரின் உபயோகத்திலிருந்து ஒதுக்கப்படும் உடைகள், போர்வைகள் போன்ற துணிவகைகளையும், படித்த புத்தகங்கள் (குர்ஆன் நீங்கலாக) போன்றவைகளையும் அதற்குரிய பெட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பிறகு உரிய வறியவர்களுக்கு முறையே சென்றடைய வழிவகை செய்யப்படுகிறது
“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.” எனும் முதுமொழிக்கேற்ப, நமது அரசுகளோ அல்லது அரசுசாரா நிறுவனங்களோ இதுபோன்ற வழியினைப் பின்பற்றி.பொதுமக்களுக்கும் இத்தொண்டின் சிறப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படச் செய்து எளியோருக்கு உதவ முன்வரலாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக