Breaking News
recent

அஜ்மானில் நடந்த கல்லூரிகள் இடையேயான விளையாட்டுப் போட்டி.!(PHOTOS)


அஜ்மான் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. 15-வது ஆண்டாக நடந்த இந்த போட்டியில் 27 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதில் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை துபாய் பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரி அணி பெற்றது. அந்த அணிக்கு கல்லூரியின் நிர்வாக தலைவர் பேராசிரியை கீதா அசோக் கோப்பையை வழங்கி கௌரவித்தார்.

 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.