பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் ஷரீஅத் சட்ட பாதுகாப்பு பெண்கள் மாநாடு மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை கோபால் சாமி மண்டபத்தில் 26-12-2016 அன்று காலை 10 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவி பேராசிரியை ஏ.கே. தஷ்ரீப் ஜஹான் தலைமையில் துவங்கியது.சையது ராஃபியா கிராஅத் ஓதினார். பேராசிரியை எம். பாத்திமா நிஷா அனை வரையும் வரவேற்றார். என். மும்தாஜ் நிஷா விளக்க உரையாற்றினார்.
கேரள முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் பாத்திமா தஹ்லியாத்தா ஜெ.. ஜான்ராணி, கர்நாடக தேசிய மேற்கு மண்டல செயலாளர் தஸ்னீம் இப்ராஹிம், கேரள தேசிய மண்டல செயலாளர் ஜெயந்தி ராஜன், பசிரா அலாவுதீன், எம். வகிதா பேகம் திருச்சி மாவட்ட செயலாளர் பர்வீன் பேகம் ஆகியோர் உரையாற்றினார்கள்.மாலை 3 மணிக்கு நடை பெற்ற நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவர் பேராசிரியை ஏ.கே. தஷ்ரிப் ஜஹான், தி.மு.க மகளிர் அணி மாநில செயலாளர் மு.க. கனிமொழி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் மகிளா மாநில தலைவி டாக்டர் எஸ். விஜயதாரணி எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஹாஜகான், மாநிலதுணைத் தலைவர் அதிரை நசிருதீன், மாநில துணைச் செயலாளர் மில்லத் இஸ்மாயில், மதுரை தெற்கு மாவட்டநிர்வாகிகள் வி.கே.என். அப்துல் காதர் ஆலிம், ஏ. இக்பால் பாட்சா, இ. நஜீப், மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் ஏ.கே. முகைதீன், வக்கீல் எஸ். ஜாகிர் உசேன், ஏ.கே. முஸ்தாக் அஹமது, திருச்சி கே.எம்.கே. ஹபிபுர் ரஹ்மான், கவிஞர் ஜாபர், விருதுநகர் எம்.ஏ. இப்ராஹிம் ஷா, திண்டுக்கல் அல்தாப் தௌபீக் உசேன், சென்னை பூவை காதர், கடையநல்லூர் வி.ஏ.எம். இக்பால், எம். கடாபி, மணிச்சுடர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, ஏ. அப்துல் வகாப் உள்பட ஆயிரக் கணக்கான பெண்களும் பங்கேற்றனர்.
மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்.
1. ஷரீஅத் சட்டம் என்பது அழிந்து போகக்கூடிய மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் அல்ல. அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்துவரும் ஏக இறைவனால் வகுப்பட்டுள்ள சட்டம். அல்லாஹ்வினால் அருளப்பட்ட திருக்குர் ஆனையும், அகிலத்தின் அருட் கொடையாக வந்த நபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை முறைகளையும் உள்ளடக்கிய ஷரீஅத் சட்டம்தான் முஸ்லிம்களின் உயிர்மூச்சு.
ஈருலக வாழ்விற்கும் வழிகாட்டி இந்த ஷரீஅத் சட்டத்தை மாற்ற எந்த ஒரு தனி மனிதனோ, எந்த ஒரு தனி அமைப்போ, எந்த ஒரு அரசாங்கமோ கை வைத்தால் அதனை இந்திய முஸ்லிம் சமுதாயம் நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ளாது. முக்கியமாக முஸ்லிம் பெண்களின் வாழ்வியல் சட்டங்களை மையமாக வைத்து, பொது சிவில் சட்டத்தை புறவழியாக உட்புகுத்த நினைக்கின்ற நடவ டிக்கையை இம்மாநாடு மிக வன்மையாகக் கண்டி க்கிறது. இந்த எண்ணத்தை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதை இம்மாநாடு உறுதியாகக் கேட்டுக்கொள்கிறது.
2. தமிழகத்தில் முஸ்லிம் பெண்கள் மேம்பாட்டிற் காகவே செயல்படக்கூடிய முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் அனைத்து மாவட்டங் களிலும் செயலாற்றி வருகிறது. இதற்கென ஒரு தனிக் கட்டிடத்தை அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு இம்மாநாடு கோரிக்கை
ஷரீஅத் சட்டத்தை மாற்ற மத்திய அரசு நினைத்தால்முஸ்லிம் சமுதாயம் பொறுத்துக் கொள்ளாது
மதுரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்
வைக்கிறது.
மதுரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்
வைக்கிறது.
3. முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 10 லட்சத்தை இதற்கான வங்கி கணக்கில் வைப்பு வைததால் அதற்கான இணைமான்யமாக ரூ. 20 லட்சத்தை தமிhக அரசு வழங்குகிறது. ஆனால் இந்த இணைமான்யம் பெறுவதில் அதிக காலதாமதம் ஏற்படு கிறது. இதனைத் தவிர்த்து உரிய காலத்தில் இது கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.4. முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. இது நடைமுறையில் மிகச் சிரமமான ஒன்றாக இருக்கிறது. இது தமிழக அரசே செயல்படுத்துகின்ற ஒரு சங்கமாக இருப்பதால் ஆண்டுதோறும் புதுப்பிக்கப் பட வேண்டும் என்ற நிலையை மாற்றி சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.5. மதுரையில் தமிழக அரசின் முஸ்லிம் பெண்களு க்கான விடுதி தற்போது பள்ளிக்கூடத்தின் உட்புறம் இயங்கி வருகிறது. பெண்களின் பாதுகாப்பை கருதி இவ்விடுதியை ஒரு தனிக் கட்டிடத்தில் அமைத்துத் தரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
6.TAMCO என்கிற தமிழ்நாடு சிறுபான்மைக் கழகம் தொழில்களைத் துவங்குவதற்கு கடன் தருகிறது. ஆனால் இதற் கான நிபந்தனைகள் கடினமா னதாகவும், நீண்ட காலம் எடுப் பதாகவும், பிணை யாக ஏதேனும் ஒரு சொத்தைக் கேட்பதாகவும் உள்ளது. ஏழை முஸ்லிம் பெண் களால் இவைகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதால் அவர்க ளுடைய ஊக்கமும், முயற்சியும் வீணாகிப் போகிறது. ஆதலால் இத்தகைய விதிகளைத் தளர்த்தி, சுலபமாக இவை கிடைத்திட வழி வகைகளை தமிழக அரசு செய்திட வேண்டும் என இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது.
7. பொருளாதாரத்தில் நலி வடைந்த முஸ்லிம் பெண் களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகள் நடத்த சிறப்பு ஏற்பாடகள் செய்துதர வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
8. பட்டம் பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர தமிழக அரசுக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
9. பள்ளிகளில், கல்லூரி களில், பணிபுரியும் இடங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் கண்ணிய உடையான பர்தாவிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த விதத்திலும் தடைவிதிக்கக் கூடாது. இது முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல. இக்கெடுபிடிகளை மத்திய – மாநில அரசுகள் உடன டியாக கைவிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
10. இந்திய நாட்டில் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மை – பழங்குடியினரின் கலாச் சார தனித்தன்மையை பாதுகாத்திடவும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றவும் அமைதியைக் கட்டித்காத்து பிரிவினைவாதத்தை எதிர்க்கவும் பாடுபடுவோம் என மாநாட்டிற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து வருகை தந்த மாநாட்டு பிரதிநிதிகள் அனைவரும் உறுதிமொழி எடுக்கிறோம் என்பதையும் இம்மாநாடு பிரகடனப் படுத்திக் கொள்கிறது.மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக