Breaking News
recent

தீபாவளி விடுமுறையில் களைகட்டிய ரஞ்சன்குடி கோட்டை : பெரம்பலூர் மக்கள் உற்சாகம்.!


தீபாவளி விடுமுறை நாளை ரஞ்சன்குடி கோட்டையில் திரண்டு பொதுமக்கள் கொண்டாடினர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலம் உண்டென்றால் அது ரஞ்சன்குடி கோட்டைதான்.

 பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கிலோ மீட்டர் தொலைவில், மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் இக்கோட்டை அமைந்துள்ளது. 

16ம் நூற்றாண்டின் இறுதியில் குன்றின் மீது அமைக்கப்பட்ட இந்த கோட்டைக்கான கட்டுமானப்பணி, நவாப்புகளின் கட்டுப் பாட்டிலிருந்த தூங்கானை மறவன் என்ற குறுநிலமன்னரால் தொடங்கப்பட்டது. இதற்கு ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின்மீது கட்டப்பட்டதால் துருவத் துக்கோட்டை எனப் பலபெயர்கள் உண்டு.
சந்தாசாஹிப்பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலிஆங்கிலேய கூட்டுப்ப டைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டாபோர் ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. 

வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோட்டையைப் பார்த்து ரசிக்கவரும் சுற்றுலா ஆர்வலர்களுக்கும், பொழுதுபோக்க வரும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இதுவரை நிறைவேற்றாத இந்தியத் தொல்லியல்துறை, இடிந்துபோன பக்கசுவர்களை சீரமைக்கமட்டும் ரூ.30லட்சத்திற்கு மேலாக நிதியைப் பெற்று கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளது.

ஆனால் சுற்றுலாத்துறை சார்பாகவோ, மாவட்ட நிர்வாகத்தால் வேறு துறைகளின் சார்பாகவோ சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை, கோட்டையின் முன்புறங்களை அழகுபடுத்தும் பணிகளுக்கு மட்டும் தொல்லியல்துறை முட்டுக்கட்டை போடுவதால் வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரமுடியாத சூழலில்தான் உள்ளது.


 இருந்தும் பரபரப்பான பண்டிகைக் காலங்களில் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான சுதந்திர பூமியாகத் திகழ்கிறது. காரணம் இதனைக் காண்பதற்கு கட்டணமில்லை. கட்டுபாடுகளும் கிடைது. 

இதனாலேயே உள்ளூர், வெளியூர் பயணிகள் என பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா ஆர்வலர்களின் புழக்கத்திலேயே இருந்து வருகிறது. கடந்த 29ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப் பட்டதால் சனி, ஞாயிறு தவிர்க்க முடியாத விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டது. 


பண்டிகையைக் கொண்டாடி முடித்த கையோடு கோட்டைக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகளால் கடந்த 2 நாட்களும் களைகட்டியது ரஞ்சன்குடி கோட்டை. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்தால் இந்தக் கோட்டைக்கு வெளிமாவட்ட வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் படையெடுத்து வருவர் என்பதில் ஐயமில்லை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.