Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும், அரசு பேருந்துகளில் குடையுடன் பயணம்! பொதுமக்கள் அவதி.!


படவிளக்கம் : பெரம்பலூரில் இருந்து மேலப்புலியூர் கிராமத்திற்கு செல்லும் அரசு நகரப் பேருந்தின்(10பி) மேற்கூரை ஒழுகுவதால் குடை பிடித்து கொண்டு பயணிப்பதை காணலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு சேதமடைந்த மேற்கூரை, உடைந்த தகடுகளுடன் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளால் பயணிகள் குடை பிடித்து கொண்டு பயணிக்கும் அவலம்

பெரம்பலூர் மாவட்டத்திற்கு, அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும் புதிய பேருந்துகள் வழங்குகிறது. 

ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன.

இந்த பேருந்துகளில் பயணததின் போது உட்புறத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் தகடுகள் கிழித்து பயணிகள் காயமடைந்து வருவதும், மழைக் பெய்யும் போது மேல் கூரையிலிருந்து மழைநீர், ஜன்னல் ஷட்டர்களில் இருந்து பேருந்தின் உள்ளே வரும் ஒழுகி தண்ணீர் ஆகியவற்றால் அரசு பேருந்துப் பயணம் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது.

மேலும், கிராமங்களுக்கு செல்லும், அரசுப் பேருந்துகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் ஒழுங்காக எரிவதில்லை. இதனால், முதியவர்களும், பெண்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

பல பேருந்துகளில் படிக்கட்டுகள் உடைந்தே காணப்படுகின்றன, அதனை அரசு அதிகாரிகள் சீர் செய்வது இல்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால்,பேருந்துகளில் பயணிப்போரின் அவதி உள்ளாகின்றனர்.

மோசமான பழைய பேருந்துகளையெ இயக்குவதால் அடிக்கடி பழுதாகி ஆங்காங்கே சாலையில் நின்று விடுகின்றன. 

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்க சம்மந்தப்பட்ட துறையினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், புதிய பேருந்துகளை வாங்கி கமிசன் பார்ப்பதே குறிக்கோளாக உள்ளது. ஆனால், முறையாக பழைய பேருந்துகளை பராமரிப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.