Breaking News
recent

துபாயில் பெண் குழந்தைக்கு தவறாக வழங்கப்பட்ட ஆண் குழந்தை விசா.!


துபாயில் வசிக்கும் இந்தியரான அதீக் அஹ்மது அவர்களின் 4 வயது மகள் ரொமானா, இந்த பெண் குழந்தையின் ரெஸிடன்ஸ் விசா காலாவதியானதை தொடர்ந்து புதிய வழிகாட்டலின் அடிப்படையில் டைப்பிங் சென்டர் வழியாக விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.

விசா புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை கூரியர் சர்வீஸ் மூலம் பெற்ற அதீக் அஹமது திறந்து பார்க்க, தனது மகளுக்கு பதில் வேறு யாரோ ஒரு ஆண் குழந்தையின் விசா ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தார்.

தற்போதைய விதிமுறைகளின்படி, இமிக்கிரேசன் அலுவலகத்திற்கும் செல்ல முடியாத நிலையில் தவித்தவருக்கு செய்தியை அறிந்த துபை இமிக்கிரேசன் அலுவலகம் மேற்கொண்டும் கூடுதல் கட்டணமின்றி விசா ஸ்டாம்பை மாற்றித்தர முன்வந்துள்ளது 

என்றாலும் நடந்துவிட்ட இந்த மனிதத் தவறை குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதுடன் இது டைப்பிங் சென்டரில் நிகழ்ந்த தவறாகவும் இருக்கக்கூடும் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.

எது எப்படியோ விசா அடிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெற்றவுடன் ஒருமுறை திறந்து பார்த்து விசா ஸ்டாம்பை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள் இல்லையெனில் விமான நிலையங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் அதீக் அஹமது அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.