இக்கூட்டத்திற்கு இமான் அமைப்பின் துணை செயலாளர் ஜனாப் லியாகத் அலி அவர்கள் தலைமை தாங்கினார் முஹம்மது தாஹா அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வருடாவருடம் ரமளான் மாதத்தில் இமான் அமைப்பினரால் அமீரகத்தில் வழங்கிவரும் சுவையுடன் கூடிய தமிழகத்து ருசியுடனான நோன்புக்கஞ்சியை.
இவ்வருடமும் தொடர்ந்து வழங்குவது குறித்தும், தமிழகத்து மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கல்வி கை ஏடு இமான் அமைப்பு வெளியிடுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டன.
மற்றும் அமீரகத்தில் இமான் அமைப்பு செய்துவரும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம், பொதுமக்கள் பயன்பெரும்வகையில் இரத்ததானமுகாம்.
தமிழகத்திலிருந்து அமீரகம் வந்து உடல்நிலை சரியில்லாமலும் தாயகத்திற்கும் செல்லமுடியாமலும் தவிக்கும் தமிழருக்கு தாயகம் செல்ல உதவிவருவது குறித்தும்
இங்கு மரணமடையும் தமிழர்களை தாயகம் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மேலும் இமான் அமைப்பின் நலத்திட்ட செயல்பாடுகள் குறித்தும் கலந்து விரிவாக ஆலோசிக்கப் பட்டன.
இக்கூட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக