Breaking News
recent

வி.களத்தூர் மக்களே மிக கவனம் வாக்குச் சாவடியில் செல்ஃபி எடுத்தால் 3 மாதம் சிறை.!

தமிழகத்தில், தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்ததைவிட 1.08 கோடி அதிகம். முதன்முறையாக வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் சுமார் 6 லட்சம் பேர்தான் என்றபோதும்,
கடந்த தேர்தலைவிட இந்தமுறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் எண்ணிக்கை உயர்வால், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் உயர்ந்ததே காரணம். இளைய சமுதாயத்தினர் சாப்பாட்டு இலையிலிருந்து இழவு வீடு வரை எங்கும் செல்ஃபி எடுத்துத் திரிகிறார்கள். இளைஞர்கள் இடையே அதிகரித்துக் காணப்படும் இந்த செல்ஃபி மோகத்தைக் கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, "வாக்குப்பதிவு மையத்துக்கு 100 மீட்டர் சுற்றளவில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. இதைமீறி செல்போன் எடுத்துச் சென்றால் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். 
இதையும்மீறி, செல்போன் பயன்படுத்தினாலோ அல்லது வாக்குப்பதிவு மையத்துக்குள் செல்ஃபி எடுத்தால், அது தேர்தல் விதிமீறலாகக் கருத்தில் கொள்ளப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இளைஞர்கள் ஆர்வமிகுதியில் செல்போன் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.