Breaking News
recent

பிறை சொன்ன சேதி என்ன?



மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற
,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள்
ஆனோரே
பிறைகூறும் செய்திகளாய்ப்
பாவடிவில்
,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே!
இருளகற்றி ஒளிவீசி வானில்நான்
…..இருந்துகொண்டு பேசுகின்றேன்
மானிடரே!
அருள்வசந்தம்
சுமந்துகொண்டு உங்களிடம்
….அகத்தினுள்ளே நீக்குகின்றேன்
மாஇடரே!
வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம்
…வாய்மையை மட்டுமுங்கள்
வாய்களிலே
உரமிட்டு வைத்திருந்து என்வரவை
….உற்சாகமாய்க் காணவந்தீர்
வாயிலிலே!
பிறைக்கீற்றின் கதிர்வீச்சில்
சுமந்துவந்தேன்
…..பிழைபொறுக்க ரமலானின்
மாதமாக
இறைக்கூற்றை நான்சுமந்த
ஒருபிறையில்
….இறக்கிவைத்தான்
மாநபி(ஸல்)க்கு வேதமாக!

thanks-கவியன்பன் கலாம்,

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.