Breaking News
recent

பெரம்பலூரில் ஈத் பெருநாள் இஸ்லாமியர் சிறப்பு தொழுகை.!உற்சாக கொண்டாட்டம்.!(புகைப்படம் இணைப்பு)


பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ரமலான்  முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.


இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் விஷேசமாக கருதப்படுவது ஈகை திருநாள் என்றழைக்கப்படும் 
ரமலான்பண்டிகையாகும். கடந்த ஜூன் 6ம் தேதி ரமலான் மாதம் பிறையை தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு இருந்து 5 கடமைகள் நிறைவேற்றும் விதமாக அனைத்து இஸ்லாமியர்களும் காலை. 


4.10 மணிக்கு நோன்பு தொடங்கி மாலை 6.47 க்கு நோன்பு திறப்பார்கள். இந்த ஈகை திருநாளில் பகல் முழுவதும் இஸ்லாமியர்கள் அணைவரும் உண்ணா நோன்பு இருந்து, தூக்கம் தொலைத்து, இரவெல்லாம் வணக்கம் புரிந்து, ஐம்புலன்ஆசைகளை அடக்கி இறைமறை குர்ஆனை ஓதுவதிலும், அதை கேட்பதிலும் இஸ்லாமியர்கள் தங்களின் ஆன்மிக இன்பத்தை ரசித்து வந்தனர். 

இதன் மூலம் பசியின் அருமை என்ன என்பதை உணர்த்தும் விதமாக மாதம் முழுவதும் உபவாசம் இருந்து அந்த உணர்வின் மூலம் உதவி செய்யும் பொருட்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து தங்கள் நோன்பின்கடமைகளைநிறைவேற்றும்விழாவாக ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் இஸ்லாமியர்கள். 


அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 
ரமலான் பண்டிகை அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை உள்ளது. 


சந்தாசாஹிப்- பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலி- ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டாபோர் ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்தது. 


இங்குள்ள கீழ்க்கோட்டை பள்ளிவாசலிலும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள 1723ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான வாலிகண்டபுரம் சமஸ்கான் பள்ளிவாசலிலும்பரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் சிறப்புத் தொழுகை நேற்று நடத்தப்பட்டது.   


பெரம்பலூர் மவுலானா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டவுன் பள்ளிவாசல், மதரஸா பள்ளிவாசல், நூர் பள்ளிவாசல், மக்கா பள்ளிவாசல், மதீனா பள்ளிவாசல், ஆலம்பாடிசாலை பள்ளிவாசல் ஆகியவற்றை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை நடத்தினர். இங்கு ஹஜ்ரத் முகமது சல்மான் தலைமையில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

லெப்பைக்குடிகாடு மேற்கு மஹல்லம் பள்ளிவாசலில் சுல்தான் மொய்தீன் தலைமையிலும், கிழக்கு மஹல்லம் பள்ளிவாசலில் முகமது இஸ்மாயில் தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடந்தது. 


மாவட்டத்தின் மிகப் பெரிய வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் லியாக்கத் அலி தலைமையில் தொழுகை நடந்தது.  ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். அரும்பாவூர் ஜாமியா பள்ளிவாசல். வாலிகண்டபுரம் ஆஸார் மக்பூரா பள்ளிவாசல், அன்னமங்கலம் விசுவக்குடி ஜாமியா பள்ளிவாசல், தொண்டமாந்துறை ஜாமியா பள்ளிவாசல்,  பூலாம்பாடியில் ஜூம்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 


இதேபோல் குரும்பலூர், சத்திரமனை, ஈச்சம்பட்டி, பெரியவடகரை, கை. களத்தூர், பெரியம்மாபாளையம், வெங்கனூர், தேவையூர் ஆகிய பகுதி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடந்தது.

பாடாலூர், ஆலத்தூர், செட்டிகுளம், டி.களத்தூர், தேனூர், மாவலிங்கை, தேனூர், அடைக்கம்பட்டி, நக்கசேலம், குரூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.







புகைப்படம் உதவி-ராஜ் முஹம்மது பெரம்பலூர் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.