Breaking News
recent

இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது!


இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது
சமூக இணைய தளமான, பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 100 மிலியனைத் தாண்டியிருக்கிறது என்று பேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.
பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா பெறுகிறது.
இந்தியாவில் மொபைல் தொலைபேசி எண்ணிக்கை பெருகுவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறும் இந்த நிறுவனம், இந்தியாவில் இணைய சேவை நாடு முழுவதும் ஓரளவு நல்ல முறையில் இருப்பதும் மற்றொரு காரணம் என்கிறது.
பேஸ்புக் நிறுவனம் எதிர்கொள்ளும் அடுத்த சவால் என்பது இந்தியாவில் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையை எப்படி 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டுவது என்பதுதான் என்று அது கூறுகிறது.
உலகெங்கும் 123 கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்ட பேஸ்புக் நிறுவனம் ஆசிய உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் தனது வளர்ச்சிக்கு புதிய இடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.