துபாய் ட்ராபிக் போலீஸ் விரைவில் Google Glass பயன்படுத்தப் போகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறும் வாகன சாரதிகளது பழைய குற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், தேடப்படும்கார்களின் பின்னணி தகவல்கள் பற்றி அறிந்து கொள்ளவும், Google Glass உதவியாக இருக்கும் என துபாய் போலீஸ் நம்புவதாக, போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, Google Glass துபாய் போலீஸின் ஸ்மார்ட் சர்வீஸஸ் இலாகாவில் ட்ரயல் பாவனையில் உள்ளது எனவும், சோதனைக் காலம் முடிந்ததும், துபாய் வீதிகளில் பணிபுரியும் ட்ராபிக் போலீஸாரால் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Google Glass என்பது, சிறிய கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ள அணியும் கண்ணாடி. இதில் போட்டோ, வீடியோ பதிவுகள் செய்ய முடியும். இன்டர்நெட் மூலம் தரவுகளை பெற முடியும். மெயின் டேட்டா பேஸ் ஒன்றில் உள்ள தகவல்களை பெறவும் முடியும்.
எமது துபாய் வாசகர்களுக்கு எச்சரிக்கை: கண்ணாடி அணிந்த போலீஸை கண்டால், தூர விலகுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக