Breaking News
recent

வெறுப்பு பிரச்சாரம் செய்யும் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு எதிராக 500 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் – ஷாக்கீர் நாயக் களத்தில் குதிப்பு.!


பிரபல ஆங்கில செய்தி சேனலான ‘டைம்ஸ் நவ்’ நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் தன்னை தொடர்புப்படுத்தி, தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்வதாககூறியும், அவரிடம் இருந்து இழப்பீடாக ரூ.500 கோடி கேட்டும் இஸ்லாமிய பிரசாகரான ஜாகிர் நாயக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த 1-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். 

மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

 மேலும் ஜாகிர் நாயக்கின் பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகளை மத்திய மற்றும் மராட்டிய மாநில புலனாய்வு போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். 

ஜாகிர் நாயக் விரைவில் இந்தியா திரும்ப உள்ளதாகவும், அப்போது அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சிவசேனா கட்சி வலியுறுத்தியது.

நான் எந்த வடிவிலும் ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரித்தது இல்லை எனவும், இது தொடர்பாக தன்னிடம் விளக்கம் கேட்டு இந்திய அதிகாரிகள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஜாகிர் நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல ஆங்கில செய்தி சேனலான ‘டைம்ஸ் நவ்’ நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி என்பவர் தன்னை தொடர்புபடுத்தி, தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்வதாககூறியும், அவரிடம் இருந்து இழப்பீடாக ரூ.500 கோடி கேட்டும் தனது வக்கீல் முபீன் சோல்கர் என்பவர் மூலம் ஜாகிர் நாயக் அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதேபோல், ‘டைம்ஸ் நவ்’ செய்தி சேனலுக்கும் நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Yousuf சொன்னது…

உண்மை நிலைநாட்ட படவேண்டும்

Blogger இயக்குவது.