இன்று காலை 6 மணியளவில் “ஸ்டார் ஃபேமிலி” ரெஸ்டாரண்ட் திறப்பு விழா நடைப்பெற்றது. இதில் ஊர் பொது மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த பொதுமக்களுக்கு ‘பாயசம்’ வழங்கப்பட்டது!
வி.களத்தூரில் நீண்ட நாட்களாகவே, சரியான முறையில் நல்ல ஒரு உணவகம் இல்லை என்பது நாம் அறிந்ததே! வண்ணாரம்பூண்டியில்கூட 6 உணவகங்கள் உள்ள நிலையில்... வி.களத்தூரில் மதுரை முனியாண்டி உணவகம் மட்டுமே உள்ள நிலையில், அதுவும்.. நான்கு நாள் திறந்தால், ஒரு வாரம் மூடப்பட்டிருக்கும். இன்னிலையில், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள்கூட நல்ல ஒரு உணவகமின்றி தவித்து வந்தனர். இன்னிலையில் தற்போது ‘ஸ்டார் ஃபேமிலி’ உணவகம் திறக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது!
சுத்தமான முறையில், தரமான உணவை, நியாயமான விலையில் கொடுக்கும்பட்சத்தில்.. நிச்சயம் மக்களின் நல்லாதரவு என்றென்றும் நிலைக்கும் என்பதை, நிர்வாகிகளுக்கு நினைவு படுத்துகிறோம்!
வசந்தவாசல் அ.சலீம்பாஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக