Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் பேரவை மனுக்கள் குழு வருகை: அக். 18-க்குள் மனு அனுப்பலாம்..



பெரம்பலூர் மாவட்டத்திற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு வர உள்ளதால், பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை அக். 18-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளது: மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தனி நபர், சங்க நிர்வாகிகள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் பொதுப் பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்த மனுக்களை, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை. சென்னை- 9 என்ற முகவரிக்கு அக். 18-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த மனுக்கள் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்னைகள் குறித்தும் இருக்கலாம்.

ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். சட்டப்பேரவை விதிகளின் வரம்பிற்குள்பட்ட மனுக்கள் மட்டுமே ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.