Breaking News
recent

முஸ்லிம் பெண்ணை பிரதமராக அமர்த்த ஜனாதிபதி மறுப்பு!


ருமேனியாவில் முஸ்லிம் பெண்ணை பிரதமராக அமர்த்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி மறுத்து வருகிறார்.
ஐரோப்பிய‌ ஒன்றிய நாட்டின் முத‌லாவ‌து முஸ்லிம் பிர‌த‌ம‌ராக‌ வ‌ரும் வாய்ப்புப் பெற்றுள்ள‌ செவில் ஷாஹிதா என்ற 52 வ‌ய‌தான‌ பொருளிய‌ல் நிபுண‌ர். இத‌ற்கு முன்ன‌ர் அமைச்ச‌ராக ப‌த‌வி வ‌கித்தவர்.
ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சி (PDS) என்ற‌ க‌ட்சியின் சார்பாக‌ பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செவில் ஷாஹிதாவின் கணவர் அக்ரம் ஷாஹிதா சிரியாவில் ஆசாத் அர‌சில் முக்கிய‌ பொறுப்பு வாய்ந்த‌ அதிகாரியாக‌ இருந்த‌வ‌ர். த‌ற்போதும் ஆசாத் அர‌சின் ஆத‌ர‌வாள‌ராக உள்ளார்.
செவில் ஷாஹிதா பிர‌த‌ம‌ர் ப‌த‌வி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌த‌ற்கு அவரது கணவரும் ஒரு கார‌ண‌மாக‌ இருக்க‌லாம் என்று கருதப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.