விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழா. அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மையம் என்று ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம கூட்டம் சுவாமி விவேகானந்தரை உரிமை கொண்டாடுகிறது.
ஆனால் உண்மை என்ன வென்றால் சுவாமி விவேகானந்தர் ஆர்.எஸ்.எஸ். இந்து வெறிக்கும், வர்ணாசிரம கொள்கைகளுக்கும் எதிரானவர். இந்த விவேகானந்தர் யார்? அவரின் ஒரு பக்கத்தை மட்டுமே வெளியே காட்டி விட்டு மறுபக்கத்தை மறைப்பதேன்.
சுவாமிவிவேகானந்தர் பார்ப்பனீ
உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் இருக்குமேயானால் விவேகானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்ப வகை செய்திட வேண்டும்.
இந்துக்கள் ஏன் மதம் மாறினார்கள்? அதற்க்கு வர்ணாசிரம் ஜாதி வெறி எப்படி காரணமான இருந்தது என்பது பற்றி விவேகானந்தர் தனது (தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11) நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிரா மணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது. மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு.
ஆதி சங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை பாருங்கள்:
சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர்.
பசுவதையும் - இந்துமதமும் குறித்து விவேகானந்தர் கருத்து:
தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ணவில்லை என்று கோமாதா பாதுகாப்பு சங்கங்களை நோக்கி சுவாமிஜி சாடுகிறார்.
பசுவைப் பாதுகாப்போம் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ள பா.ஜ.க.வினரே, பசுவை கோமாதா என்று போற்றும் மாட்டுக்குப் பிறந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., உள்ளிட்ட சங்பரிவார்க் கூட்டமே, உங்களையெல்லாம் சராமாரியாக சாடுகிறார் விவேகானந்தர் - இதற்கு முதலில் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு விழாவை விசேடமாக நடத்துங்கள். இந்துவெறி, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மகானை ஏதோ உங்கள் கருத்துக்களை சொல்லும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேடர் போல் சித்தரிக்க உங்களுக்கு மானம், ரோசம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக