Breaking News
recent

பெரம்பலூரில் உள்ள வங்கிகளில் புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வினியோகம் : பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.!


பெரம்பலூரில் உள்ள வங்கிகளில் இன்று புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள் மற்றும் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட பழைய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளுக்கு நூறு ரூபாய் தாள்களை வங்கிகள் சில்லரையாக வழங்கியது. 

இதனை மகிழ்ச்சியுடன் மக்கள் பெற்று சென்றனர். புதிய ரூபாய் தாள் பிரச்சனையில் பெரம்பலூர் பகுதி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். 

ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்கள் வாங்கும் மீதம் கொடுக்க வேண்டிய நூறு ரூபாய் நோட்டுகளுக்கு தற்போது பெருமளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.

2 ஆயிரம் ரூபாயை கொடுத்து ரூ. 100க்கு பொருள் வாங்கினால் ரூ. 1900 கொடுப்பது சிரமமாக உள்ளது, என சில்லரை வியாபாரிகள் தெரிவித்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.