Breaking News
recent

பசுமாட்டை வைத்து, அரசியல் செய்வதை நிறுத்துங்கள் - மம்தா.!


பசுமாட்டை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் மோடி தலைமை பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“காவி பாகுபாட்டு அரசியல்” குறித்து கடும் விமர்சனம் வைத்தார், தற்போது, தியாகிகள் தினத்தையொட்டி மத்திய கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியில் மம்தா ‘பசு அரசியலை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

“ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவோ அல்லது அதன் சகோதர அமைப்பின் பெயரிலோ சில நபர்கள் வீடு வீடாக சென்று எவ்வளவு பசுமாடு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பதாக நான் கேள்விப்படுகிறேன். இம்மாதிரி கேள்வி கேட்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

மக்களுக்கு தேர்ந்தெடுப்பு உரிமை உள்ளது என்பதை சிலர் மறந்து விட்டனர். நான் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பிரச்சினை இல்லை என்கின்றனர், ஆனால் சிலர் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பிரச்சினை செய்கின்றனர். 

நான் புடவை அணிந்தால் பிரச்சினையில்லை, ஆனால் சிலர் சல்வார் கமீஸ் அணிந்தால் பிரச்சினை...வங்காளிகள் வேட்டிகளையே விரும்புவர், ஆனால் சிலர் லுங்கியை விரும்புகின்றனர். 

இதனால் என்ன? நீங்கள் யார் தீர்மானிக்க? என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்கள் யார்? இது எப்படி சாத்தியம், மக்களை பிரித்தாளும் இத்தகைய அரசியலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

குஜராத்தில் தலித்துகள் தாக்குதலுக்கு இரையாகின்றனர், நாம் அதற்கு கண்டனம் எழுப்புகிறோம். 

எனவே யாராவது வந்து பசுமாட்டு கணக்கெடுத்தால் - தீயை மூட்ட நினைத்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.

 அரசியல் ரீதியாக இத்தகைய செயல்களை எதிர்கொள்வோம். வீடுகளுக்கு தீவைக்க நாங்கள் ஒருக்காலும் அனுமதியோம்.

தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சிலர் நீண்டகாலமாக பசுமாட்டு தோல் வர்த்தகம் செய்து வருவதாக நான் செய்தித்தாள்களில் படித்து வருகிறேன். 

பசுமாட்டுத் தோலை காலணி தைப்பவர்களும் பயன்படுத்தி வருகின்றனர், இவையெல்லாம் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. ஆனால் இங்கு இவர்கள் கட்டிவைத்து அடித்து உதைக்கப்படுகிறார்கள்” என்று ஆவேசமாகப் பேசினார் மம்தா பானர்ஜி
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.