Breaking News
recent

மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை!


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்து வருகின்றனர்.

மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பழைய 500,1000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால், அபராதம் விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. 


மேலும் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவசர சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை என மத்திய அரசு அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. 


மேலும், அந்த திருத்தத்தில் ''மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் குறைந்த பட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  திருத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.

VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.