எம்மால் முடிந்ததை எம் ஊருக்கு செய்யும் ஆவலில் உருவானதுதான் இந்த கல்லாறு. இதில் எமக்கு தெரிந்த நல்லவற்றை மற்றவர்களும் அறிந்துக்கொள்ள 16 கல்லாறு மாத இதழ்களை வெளியிட்டுள்ளோம்.
இதில் நீண்ட நாள் ஆசை, சில வருட ஆர்வம் ஒரு சிறப்பு மலர் வெளியிட வேண்டுமென்பது. அதனடிப்படையில் கடந்த ஒரு மாதங்களாக இதன் முயற்சியில் ஈகைப்பெருநாள் சிறப்பு மலரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் இந்த சிறப்பு மலரை மில்லத் நகர் பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகிகளை வைத்து வெளியிட வேண்டும் என்று நாடியிருந்தோம். அதனடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் முன்னிலையில் இந்த சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டது.
வி.களத்தூர் ஜமாத் தலைவர் லியாக்கத் அலி அவர்கள் முதல் பிரதியை வெளியிட, அதை மில்லத் நகர் முன்னாள் நிர்வாகி ஜாபர் அலி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்த எளிய மலர் வெளியீட்டு நிகழ்வில் வி.களத்தூர் ஜமாத் செயலாளர் பஷீர் அஹமது மற்றும் மில்லத் நகர் ஜமாத் நிர்வாகி ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் கல்லாறு மாத இதழின் ஆசிரியர் முஹம்மது அலி அவர்கள் நன்றி கூறினார்.
இந்த சிறிய மலரில் புதியவர்களுக்கும் எழுதும் வாய்ப்பளித்து அவர்களின் எழுத்தாற்றலுக்கும் ஊக்கம் தந்திருக்கிறோம். புதிதாக உலமாக்களும், படித்த இளைஞர்களும் சிறப்பாக எழுதியுள்ளனர். அடுத்தடுத்த மலர்களிலும் தொடர்ந்து எழுதுவார்கள்.
இந்த மலருக்காக எமக்கு விளம்பரங்கள் தந்துதவிய அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். சிறப்பான முறையில் இம்மலரை அச்சிட்டு கொடுத்த அல் அமீன் பிரிண்டிங்க்ஸ் நிறுவனத்தாருக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
புதிய முயற்சி என்பதால் சிறு சிறு தவறுகள் இதில் இருக்கலாம். தவறுகள் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம். பாருங்கள், படியுங்கள், பயனடையுங்கள். விரைவில் இதன் பதிவை நமது இணையதளத்தில் பதிவு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.
கல்லாறு மீடியா
வி.களத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு கல்லாறு நிருபர் ஈகைப்பெருநாள் சிறப்பு மலர் வழங்கியபோது.
வி.களத்தூர் ஐடியல் பள்ளி தாளாளர் மஹஸர் அலி அவர்களுக்கு கல்லாறு நிருபர் ஈகைப்பெருநாள் சிறப்பு மலர் வழங்கியபோது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக