வாசிப்பு அதிகம் காணப்படும் போது தேடல்களும் அதிகரிக்கின்றன.இந்த வாசிப்பை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் பல. உலக வாசிப்புத்தினம் என்றெல்லாம் உலகில் காணலாம்.வாசிப்பு இஸ்லாத்தை பொறுத்தவரை மார்க்கரீதியிலான ஒன்றாக இருப்பதை காணலாம்.
கல்வியை தேடுவது ஒரு முஸ்லிமின் கட்டாய அம்சங்களில் ஒன்று.இஸ்லாத்தில் எந்தவொரு குருட்டுப்பின்பற்றலும் கிடையாது.எதையும் செய்வதற்கு முன் அதை பற்றிய சீரிய தெளிவு கட்டாயம். இஸ்லாமிய அடிப்படை சார்ந்த கடமைகளையும்.
சட்டதிட்டங்களையும் கற்பது கட்டாயம்.அதை விட்டும் பராமுகமாக இருப்பதுஇ அனைவரும் செய்வது தான் சரி என செயல்படுவது என்பன தீமையை கொண்டு வரும் என இஸ்லாம் தடுத்துள்ளது.
அல்லாஹ்வை படைப்பாளனை பற்றிய அறிவுஇஇஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை கோட்பாடுகள்இஅதனுடன் துணைநிற்பவைகள்இஇஸ்லாமிய சட்டதிட்டங்கள்இதனிமனித சமூக நடவடிக்கைகள் என அனைத்து பகுதிகளிலும் மிகவும் அடிப்படையான முக்கியமான அம்சங்களை தேடிப்படிப்பது என்பதுதான் பூரணத்துவமிக்க இஸலாமிய நம்பிக்கையாகும்.
இவற்றை படிப்பது சமூகத்தில் குறிப்பிட்ட சிலரின் கடமையாகும்இஅல்லது இஸ்லாமிய மத்ரஸாக்களில் படிப்பவர்களுக்கு மாத்திரம் கடமை என சுருக்குவது தவறாகும்.அல்லாஹ் மறுமையில் அனைவரிடமும் தனித்தனியே நீர் கற்றதன் பிரகாரம் என்ன செய்தாய் என விசாரிப்பான் அதன் போது எவறும் நான் படிக்கவில்லை எனவே செயற்படுத்தவுமில்லை என சொல்லிவிட்டு தப்பிவிட முடியாது.
இக்கல்வியானது செயற்படுத்தப்படக்கூடியதாக அமையும் போது அது கற்றவருக்கும் பிறருக்கும் பயனிப்பதாக அமையும்.அது எவ்வித மாற்றத்தினையும் ஏற்படுத்தாத போது அது அழிவினை கொண்டுவரும் இமாம் புகாரி -ரஹ்- அவர்கள் அவர்களது ஸஹீஹ் எனும் கிரந்தத்தில் செயற்பாடுகளுக்கு முன் அறிவு என ஒரு தலைப்பினை கொண்டு வந்துள்ளார்கள்.
இது இரு பிரதான அம்சங்களை சுட்டி நிறகின்றது.ஒன்று செயற்பாடுகளுக்கு முன் அது பற்றிய தெளிவான அடிப்படை கல்வியும். அந்த கல்வியின் பின் செயற்பாடும் என்பதாகும். இரண்டும் ஒன்று கலக்கும் போது பூரணமிக்க கல்வி.அறியாமல் செய்வது மடமைஇஅறிந்து செயற்படுத்தாமை பழிப்புக்குரியது.
கல்வி செயற்படுத்தப்படும் போது அதிகரிக்கின்றது. தேங்கிநிற்கும் போது மறதிஇதவறுஇநுணுக்கமின்மைஇதேர்ச்சியின்மை ஆகியவற்றால தேய்வுறுகின்றது. முன்னைய இஸலாமிய நபித்தோழர்களது வாழ்வு கல்வியும் செயற்பாடும் இரண்டர கலந்து காணப்பட்டது.ஆகவே அவர்கள் போற்றப்பட்டனர்.அறிவில் மேலோங்கி நின்றனர்.அவர்களுக்கு பின்னால் வந்தவர்கள் இருண்ட கண்டங்களை பேரொளி மிக்கதாக மாற்றியமைத்தனர்.
கல்வியை புகழ்ந்து அதிகமானவைகள் வந்துள்ளன.அவற்றை அறிவது அந்த அறிவை தேடலின் ஆர்வம் ஆவல்
உணர்வு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும்.அதன் உந்து சக்தியால் மடமை அழிய வேண்டும்.
இவ்வாறு வந்துள்ளவைகளை பார்கும் போது அல்லாஹ் குர்ஆனில் அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமன் ஆகுவார்களா என அனைவரையும் கேட்கின்றான். இதற்கான பதில் இல்லை அறிஞர்கள் விண்ணில் மிதக்கும் நட்சத்திரங்களை போன்றவர்கள்.
அது உயர்ந்துள்ளது.பிறருக்கும் வழிக்காட்டுகின்றது.இவ்வாறே அறிஞர்களின் அந்தஸ்து மகிமை உயரந்ததுஇபிறரை மடமை இருளில் இருந்து விடுவிக்கின்றனர்.
இது இவர்கள் மரணித்த பின்னும் இவர்களின் பெயர்களை நிலைப்பெறச்செய்யும்.அவர்களை அல்லாஹ் உயிருடனும் மரணித்த பின்னும் உயர்த்துகின்றான்.அல்லாஹ் குறிப்பிடும் போது ' ஈமான் கொண்டவர்களே! சபைகளில் 'நகர்ந்து இடங்கொடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால்இ நகர்ந்து இடம் கொடுங்கள்;
அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிரஇ 'எழுந்திருங்கள்' என்று கூறப்பட்டால்இ உடனே எழுந்திருங்கள்; அன்றியும்இ உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
(58:11). இன்னும் அல்லாஹ் குறிப்பிடும் போது அறியாமையின் போது அறிஞர்களை நாடி அவர்களிடம் தீர்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றான். நீங்கள் அறியாதவர்களாக இருப்பின் அறிந்தவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்'
(16:43)அல்லாஹ்விடத்தில் அறிவை அதிகப்படுத்தி தருமாறு நபிகளார் வேண்டினார்கள்.ஆகவே அனைத்தையும் விட கல்வி உயர்ந்தது என்பதை காட்டுகிறது.
மார்க்க அறிவும் அதில் விளக்கமும் கொடுக்கப்படுவது என்பது ஒரு அடியானுக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றான் என்பது பொருளாகும்.முஆவியா பின் அபீ ஸுப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்இநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கின்றான்' (.நூல் புகாரிஇ முஸ்லிம்.)
இன்னும் 'யார் அறிவைத்தேடி பயனிக்கின்றாரோ அவர் அதிலிருந்து திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றார்' (நூல் திர்மிதி).அல்லாஹ் மார்க்க கல்வியை கற்பவருக்கு சுவர்க்கத்தின் பாதைகளில் ஒன்றை இலகுபடுத்துகின்றான்.கல்வியை கற்று அதை வாழ்வியல் திட்டமாக செயல்வடிவம் கொடுக்கும் போது சுவனத்தினை அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக