25 மாதங்கள் வரை, தினமும் இவ்வளவு தொகை கட்டினால் போதும் அல்லது வாரம் ஒருமுறை இவ்வளவு தொகை கட்டி னால் போதும் அல்லது மாதம் ஒருமுறை இவ்வளவு தொகை கட்டினால் போதும். என்று சொல்லுவார்கள்.
உடனே ஒரு விண்ணப்பத்தை உங்களிடம் கொடுத்து அதை பூர்த்தி செய்யுங் கள் என்று சொல்லி, உங்களது புகைப்படத்தை யம் அதில் ஒட்டச் சொல்வார்க்ள் அத்துடன் உங் களது குடும்ப அட்டை, பான் கார்டு போன்ற அடையாளஅட்டையின் நகலைகேட்பார்கள்.
மேலும் நீங்கள் தைரியமாக பணம் கட்டுங்கள். சீட்டு ஏலம் நடைபெறும் போது, உங்களுக்கு தொகை அவரசமாக தேவைப்பட்டால்,
ஒரு குறிப்பிட்ட தொகை தள்ளு போக மீதி தொகை உங்களுக்கு முன் கூட்டியோஅல்லது உங்களுக்கு பணத் தேவை எதுவும்
இல்லையென்றால் கடைசி மாதத்தில் உங்களுக்கு உங்க தொகை அப்படி யே கிடைக்கும் என்றெல்லாம் அதுவும் உடனடி யாக நீங்கள் பெற வழிவகையுண்டு.
என்றெல் லாம் கூறி, உங்களது மூளைச் சலவை செய்வார்கள். நீங்களும் சரி என்று
தலையாட்டிக்கொண்டே அவர்கள் நீட்டும் இடங்களிலெல்லாம் கையெ ழுத்திடுவீர்கள். ஆனால் பணம் கட்டியபிறகு, பணம் கேட்டால் ஆயிரத் தெட்டு கேள்விகள் கேட்பார்கள். உங்களுககோ மூச்சு திணறும். ஏன் இப்படி ?
சீட்டுபோடுமாறு நிதிநிறுவனத்தில் இருந்து வரும் நபரிடம் நீங்களே பல கேள்விகளை கேட்டு, அந்நபர் அளித்த அதற்குரிய பதில்கள் உங்களுக்கு திருப்தியாக இருந்தால், சேருங்கள். இல்லையென்றால், வே ண்டாம் என்று சொல்லி ஆரம்பத்திலேயே தொல்லையிலிருந்து விடுபடு ங்கள்.
சீட்டு போடும்படி நிதிநிறுவனதில் இருந்து வரும் நபர்களிடம் நீங்கள் கேட்வேண்டிய கேள்விகள்
1. ஒவ்வொரு மாதமும் சீட்டு ஏலம் தவறாமல் நடைபெறுமா?
2. சீட்டு ஏலம் நடைபெறும் நாளை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிப்பீர்களா?
3. சீட்டு ஏலம் எத்தனை மாதங்கள் வரை நடைபெறும்.
4. மற்ற நிதி நிறுவனத்தில் தரும் வட்டியை விட நீங்கள் ஏன் கூடுதலாக தருகிறீர்கள்?
5. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சீட்டு ஏலத்தில் அதிகளவு தள்ளு எவ்வளவு போகும்.
6. நாங்கள் சீட்டு எடுத்த பணம் எங்களுக்கு எத்தனை நாட்களில் கிடைக்கும்.
7. அரசாங்கத்தில் முறைப்படி பதிவு செய்தி ருக்கிறீர்களா? செய்திருந்தால் அந்த பதிவு எண் எங்கே?
8. ஏதேனும் அவசரத்தேவைகளுக்கு பணத்தை எடுக்கலாமா? அப்படி பணம் எடுத்தால் எவ்வளவு வட்டி கணக்கிடுவீர்கள்.
9. சீட்டு முடிந்தவுடன் எத்தனை நாட்களுக்குள் எங்களுக்கு பணம் கிடைக்கும்.
10. எங்களால் இடையில் பணம் கட்டத் தவறும் பட்சத்தில் எங்களது அந்த தொகை எப்போது கிடைக்கு ம். அதில் எவ்வளவு பிடித்தம் செய்வீர்கள்?
11. எங்களை போன்றவர்கள் கட்டும் பணத்தை நீங்கள் எதில் முதலீடு செய்கிறீர்கள்?
12. உங்கள் நிதி நிறுவனம், எத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறது.
13. உங்கள் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் யார்? அவர் எங்கு இருக்கி றார்? அவர் இந்தியரா? அவர் இந்தியராக இருந்தால் எங்கிருக்கிறார். அவரது தகுதி என்னென்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக