Breaking News
recent

அரபு மொழியில் திருக்குறள்: செய்ததும், செய்ய வேண்டியதும் !



திருக்குறள் உலக மொழிகள் பலவற் றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரபி, பர்மியம், சீனம், டச்சு, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ஜப்பானீஸ், கொரியன், இலத்தீன், மலாய், போலிஷ், ரஷ்யன்,ஸ்பானிஷ், சிங்களம் ஆகிய உலக மொழிகளில் திறக்குறள் மொழியாக்கம் கண்டுள்ளது. 
என்றாலும் இம்மொழி பெயர்ப்புகளில் இவர்களுக்கிடையே நுட்பமான வேறுபாடு இருப்பதையும், மொழிபெயர்ப்பு உத்திகள் வேறுபாடு கொள்வதையும் நாம் உணர முடிகிறது. அரபி மொழியில் பேராசிரியர் முஹம்மது யூசுஃப் கோகன், திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். 
வள்ளுவரின் சிந்தனை களை, குறட்கருத்துக்களை உணர்ந்து, அரபி மொழியின் சொல்லாடல்களில் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை முன்னிறுத்தி மொழி பெயர்க்க முனைந் துள்ளார். அதாவது வாசகரை நெருங்கும் நோக்கில் சில மொழிபெயர்ப்பு உத்தி களைக் கையாண்டுள்ளார்.
ஆனால் வள்ளுவரை நெருங்கும் நோக்கில் மொழி பெயர்ப்பு உத்திகளைக் கையாளவில்லை. அம்மொழிபெயர்ப்பு உத்திகளை ஆராய்வ தும், சிறந்த மொழிபெயர்ப்பு வெளிவர நாம் எவ்வித முறைமைகளையும் உத்திகளை யும் கையாள வேண்டும், பேண வேண்டும் என்பதையும் பதிவு செய்வதே இக்கட்டு ரையின்நோக்கமாகும்.
முஹம்மது யூசுஃப் கோகன், கி.பி. 1961ம் ஆண்டு முஹம்மது இப்ராஹிம் கோகனின் மகனாக மீனாம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவ்வூர் செஞ்சிக் கோட் டையில் இருந்து மூன்று கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. “அல் – அய்யாத் அல் – முகத்தஸா” என்ற திருக்குறள் அரபி மொழிபெயர்ப்பில் நாம் பின் வரும் நிகரன்களைக் கண்ணுற லாம். அவை சொல்லாக அல்லது தொடர் நிகரன்களாக விளங்குகின்றன. 
“வான் சிறப்பு” என்ற சொல்லிற்கு மழையினது சிறப்பு பற்றிக் கூறுதல் என்று பொருள்படும். ‘வான்’ என்ற சொல் லிற்கு ‘ஸமாஉ’ என்றும் ‘மழை’ என்ற சொல்லிற்கு “மத்தர்” என்ற சொல் லும் அரபியிலே நிலவி வரும் வேளையில், மொழிபெயர்ப்பாளர் ‘மத்தர்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.
“ஆதிபகவன்” என்ற சொல்லை மக்களுக்கெல்லாம் முதல்வன், முதன் மைப் பகுதி என்ற பொருளில் வள்ளுவர் தனது குறளில் யாத்துள்ளார். மொழி பெயர்ப்பாளர் “ஆதிபகவன்” என்ற சொல்லை “அவ்வலுல் காஇனாத்” எனக் கூறுகிறார். “காஇனாத்” என்றால் உலகம், “அவ்வல்” என்றால் முதன்மை யான, முதலாவதாக எனப் பொருள். ஆக ஆதிபகவன் என்ற சொல்லை “முதன் மையான உலகம், அண்டம், படைப்பினம்” என்ற பொருளில் அரபியில் கையாண் டுள்ளார்.
“நீத்தார்” என்ற சொல் “ஜுஹ்த்” என அரபியில் மொழியாக்கம் கண்டுள் ளது. ஜுஹ்த் என்றால் துறவி, சந்நியாசி எனப் பொருள்படும். வள்ளுவர் உரைக்கும் ‘நீத்தார்’ என்ற சொல் இல்லற இன்பத் தைத் துறந்து பொதுநலம் புரியும் பெரியார் எனப் பொருள்படும்.
ஆனால், ‘ஜுஹ்த்’ என்ற சொல்லோ இல்லற வாழ்வு மேற்கொள்ளாத துறவி எனப் பொருள்படும்.அனிச்சம்பூ என்பது ஒருவகை நீர்ப்பூ. எவரேனும் மோந்தால் வாடும் என்பதாக குறளில் அமைந்துள்ளது. அரபியிலே “அனேச்சா” என்பதாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
 ஒருவகைப் பூ எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.“செய்ந்நன்றி அறிதல்” என்றால் பிறர் செய்த நன்மையை மறவாமை எனப் பொருள். இதற்கு அரபியில் “இஹ்ஸான்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இதன் பொருள் நன்மை பயத்தல், அனு கூலம் செய்தல், தருமம், ஈகை, கருணை, கொடை, நற்செயல்கள் புரிதல். ஆக அரபி மொழியின் ஆழமான சொற் செறிவு இந்த “இஹ்ஸான்” எனும் சொல்லிற்கு அமைந்துள்ளதை இயம்புகிறது.“நாவினால் சுட்டவடு” என்பது“இஹ்திராக் பில்லிஸான் அல் – முர்ரு”என அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இஹ்திராக் என்றால் சுடுவது எனப் பொருள்படும். அல்லிஸான் அல் – முர்ரு என்றால் இனிமையற்ற கடுஞ்சொல் எனப் பொருள். “வடு” என்ற பொருள் அரபியில் உரைக்கப்படவில்லை. “கற்பியல்” என்பதை “எல்லோரிட மும் விளங்கவேண்டிய காதலொழுக்கம்” எனப் பொருள்படும் “அல் – ஹூப்பு பிர்ரிவாஜி” என்பதாக மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். 
ஆக மேற்கூறிய மொழிபெயர்ப்பில், மொழிபெயர்ப்பாளர் மூல நூலுடனும், மூல நூல் சார்ந்த பண்பாட்டுடனும் நெருங்க முயன்றுள்ள பான்மையைப் புலப்படுத்து கிறது.இனி மேற்கொள்ளப்படும் அரபி மொழிபெயர்ப்பில் பின்வரும் காரணிகள், மொழிபெயர்ப்பு உத்திகள் கையாளப்பட வேண்டும்; கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 
மேலும் திருக்குறள் அரபி மொழிபெயர்ப்பில் தோன்றிய சிக்கல் களை களைவதற்கு உரிய தீர்வுகளாய் இக்காரணிகள் விளங்குகின்றன.மூல நூலாசிரியரை நெருங்கும் நோக் கில் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும்தமிழ்ச் சொல்லாடல்கள் தமிழர் பண் பாட்டுடன் நெருங்கும் விதத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
உருவக வழக்குகளை அவற்றுக்கு இணையான பெறுமொழி உருவக வழக்கு களாக புலப்படுத்துவது சிறப்பு தரும்.இது போன்ற பொறுப்பான மொழி பெயர்ப்புகளை நாம் பெற அரசு சார்ந்த நிறுவனங்கள், தங்களின் நேரடி மேற்பார் வையில் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மொழியறிவின் ஆற்றலோடு உள் ளார்ந்த ஈடுபாடும் தேவை. கவனப்பிசகு என்பது ஒரு சொல் அல்லது சொற்றொடர் அல்லது மரபுச் சொற்றொடர் என ஏதேனும் ஒன்றில் இருந்தால் கூட நேர் மாறன பொருளைத் தந்துவிடும் அபாயம் உண்டு.
சொல்லுக்குச் சொல் மொழி பெயர்ப்பதுசாற்றைக் கீழே ஒழுக விட்டு விட்டு சக்கையைக் கையில் தருவதற்கு ஒப்பாகும். மூல ஆசிரியரின் கருத்துகளை வெறும் செய்திகளாக அறிவதோடு நின்று விடாமல் உணர்வுப்பூர்வமாக அவற்றில் ஒன்றிவிடும் மனநிலையோடு படைத் திருந்தால் மட்டுமே மொழி பெயர்ப்பு அதன் உண்மையான பயனைத் தரும்.எனவே மொழிபெயர்ப்பு திறமையாகச் செய்யக்கூடிய ஒரு படைப்புக்கலை.
சொல் பயன்பாட்டின் உணர்வு பொரு ளைப் புரிந்து நடையியல் தனிச்சிறப்புக் களின் வழி மொழிபெயர்ப்பை படிப்பவரி டையே கொண்டு சேர்க்க வேண்டும். திருக்குறளுக்கு அரபி மொழியில், மொழிபெயர்ப்பே இல்லாதகுறையை, கோகனின் “அல் – அய்யாத் அல் – முகத்தஸா” என்ற படைப்பு நிறைவு செய் தாலும் உரைநடை வடிவிலேயே உள்ளது. 
இனி வருங்காலத்தில் செய்யுள் வடிவில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.சென்னை, ஜமாலியா அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வரும், பேரா சிரியருமான மவுலானா அப்துர் ராஃபி (1923 – 2009) அவர்கள் திருக்குறளை பாக்களாக அரபி மொழியிலேயே மொழி பெயர்த்துள்ளார். 
இவர் அரபி, பாரசீகம், சமஸ்கிருதம், உருது, இந்தி, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராவார். ஆனாலும் இம் மொழி பெயர்ப்பு நூல்வடிவில் அச்சிட்டு வெளி யிடப்படவில்லை.
வெறும் கையெழுத்துப் பிரதியாகவே இன்றும் திகழ்கிறது.புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக அரபித்துறைப் பேராசிரி யர் முனைவர் பஷீர் அஹ்மது ஜமாலி, அப்பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கி. நாச்சிமுத்துவின் தூண்டுதலின் பேரில் அரபி திருக்குறள் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத் தின் நிதியுதவியில் இப்பணியை நிறைவு செய்துள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிதியுதவியில், சென்னைப் பல்கலைக் கழக அரபித்துறை உதவிப் பேராசிரியர், முனைவர் ஜாகீர் உசேன், திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்துள்ளார்.
மேற் கூறிய இரண்டு மொழிபெயயர்ப்புகளும் அச்சாக்கத்தில் உள்ளன.எனவே திருக்குறளின் அரபி மொழிபெயர்ப்பு செம்மையாக மேற்கொள்ளப்பட்டு, மேற்கூறிய மொழிபெயர்ப்பு சிக்கல்கள் களையப்பட ஒரு செம்மையான மொழி பெயர்ப்பாய், திருக்குறள் அரபுலகை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.


VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.