சௌதி அரேபியாவில் வேலை செய்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்கள் இருப்பை சட்டபூர்வமாக்கிக்கொள்ள சௌதி அரசு கொடுத்திருந்த கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், அங்கு சுமார் 30,000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போலிஸ் சோதனைக்கு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், பல உணவு விடுதிகள், சலவைக்கடைகள், சிறு வர்த்தகக் கடைகள் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாததால், இறந்த உடல்களைக் கழுவும் பணி போன்ற வேலைகளைச் செய்ய யாரும் இல்லாத நிலையில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமார் 8,000 தொழிலாளர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு செல்ல இந்தோனேஷியா விமானங்களை ஏற்பாடு செய்ய முயன்று கொண்டிருப்பதாக இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் கூறினார்.
இவர்களில் பலர் சௌதி அரேபியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்துவந்தவர்கள்.
சவூதி அரேபியாவில் வேலை இழந்து தவிக்கும் கேரள மாநிலத்தவரை தனி விமானத்தில் அழைத்து வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. சவூதி அரேபியாவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகின்றனர்.
வேலை இழந்த இந்தியர்கள் தொடர்ச்சியாக நாடு திரும்பி வருகின்றனர். ஏராளமான கேரள மாநிலத்தவரும் திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனை பற்றி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, சவூதி அரேபியாவில் நிதாகத் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேரள மாநிலத்தவர் தாயகம் திரும்பி வந்துள்ளனர்.
இவர்களுக்கு பல்வேறு வகையில் மறுவாழ்வு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சவூதி அரேபியாவில் இருந்து திரும்புவர்களை இலவசமாக அழைத்து வர தனி விமானம் அனுப்பப்படும் என்றார்.
சவூதிஅரேபியாவில் தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பத்திரமாக நாடுதிரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?…நடவடிக்கை எடுக்குமா?…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக