Breaking News
recent

சென்னையில் விமான சேவை தொடங்கியது; பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை என அறிவிப்பு!


சென்னையில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் நேற்று பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. 

‘வார்தா’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை மூடப்பட்டது. இதனை தொடர்ந்து ஓடுபாதை மூடப்பட்டது, விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 

மேலும், ‘வார்தா’ புயல் தாக்கம் குறைந்து நிலைமை சீரடைந்தால் ஓடுபாதை போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திடீரென விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னையில் புயல் மற்றும் மழை நின்ற பின்னர் விமான நிலையத்தில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது.

வர்தா புயல் காரணமாக சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை இன்று அதிகாலை 5:45  மீண்டும் தொடங்கியது. விமானங்கள் தரையிறங்க தொடங்கின. 

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை

வார்தா புயல் காரணமாக 12-ந் தேதி (நேற்று) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று (டிசம்பர் 13&ந் தேதி) மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மிலாது நபி தினத்துக்கு அரசு விடுமுறை விடுபடுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில், தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் 13-ந் தேதியன்றும் (இன்று) தொடர்ந்து மூடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.