Breaking News
recent

ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் எண்கள் : மாணவி கண்டுபிடிப்பில் தகவல்.!


ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், தமிழ் எண்கள் எழுதும் வழக்கம் இருந்துள்ளதை, ராமநாதபுரம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, விசாலி கண்டுபிடித்துள்ள ஓலைச்சுவடியின் மூலம் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம், கல்வெட்டு, ஓலைச்சுவடிகளை வாசிக்கவும், படி எடுக்கவும், 9ம் வகுப்பு மாணவி, விசாலி கற்றார்.  பின், அவற்றை தேடி சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். சமீபத்தில், தன் வீட்டில் இருந்த, தாத்தா காலத்தில் எழுதப்பட்ட, ஓலைச்சுவடியை கண்டுபிடித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, மாணவி விசாலி கூறுகையில், ''நான் கண்டுபிடித்த ஓலைச்சுவடி, பிச்சைப் பண்டிதர் பெண்சாதி குட்டச்சி என்பவரின் ஈமச்சடங்கில் செய்யப்பட்ட மொய் குறிப்பு. அதில், பிங்கள ஆண்டு, அற்பிசை மாதம், 23ம் நாள் வியாழக்கிழமை என, எழுதப்பட்டுள்ளது. அதில், அனைவரும், தலா, ஒரு ரூபாய் மொய் அளித்துள்ளனர்,'' என்றார்.

இதுகுறித்து, பள்ளி ஆசிரியர், ராஜகுரு கூறியதாவது: அது, 1917ம் ஆண்டு, நவம்பர், 8ம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதில் உள்ள, பண்டிதர் என்ற சொல், முடி திருத்துவோர் சமூகத்தை குறிக்கிறது. 


ஒரு ரூபாய் மொய், அக்குடும்பத்தின் பொருளாதார சிறப்பையும், அப்போதைய மருத்துவ சமூக அந்தஸ்தையும் உணர்த்துகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், தமிழ் ஆண்டு, தமிழ் மாதம், தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இறப்பு நிகழ்ந்த நேரத்தை மணி, திதி, நட்சத்திரம்

ஆகியவற்றால் குறித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.