Breaking News
recent

சார்ஜாவில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சி.!


சார்ஜா மெகா மாலில் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது. சார்ஜா மெகா மாலில் ஆறாவது ஆண்டாக தபால் தலை கண்காட்சி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. 

இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 240 நிறுவனங்கள் பங்கேற்றன. அமீரக தபால் தலை சேகரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சியினை அமீரக மத்திய தேசிய கவுன்சிலின் முன்னால் சபாநாயகர் முகம்மது அல் முர் திறந்து வைத்தார். அவர் தனது உரையில் இந்த கண்காட்சியானது அமீரகத்தை பழங்கால வரலாற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது என பாராட்டு தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் அரிய தபால் தலைகள் மட்டுமல்லாது, பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் வந்து இந்த கண்காட்சியை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டினர்.

கண்காட்சியின் இறுதி நாளான நேற்று அரிய தபால் தலைகள் பல ஏலம் விடப்பட்டன. இதனை தபால் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள பலர் வாங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தபால் தலை கண்காட்சியினை அனைவரும் வாய்ப்பினை நழுவவிடாமல் பார்க்க வேண்டும் இந்த கண்காட்சியினை பார்வையிட்ட தமிழக மாணவர் விவேகானந்தன் தெரிவித்தார்.

தபால் தலையை சேகரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வரும் ஆண்டுகளில் இந்த கண்காட்சியில் அதிகமானவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.