Breaking News
recent

பிஸ்கட் பிரியர்களா நீங்கள்?:கட்டாயம் இதனை வாசியுங்கள்.!


பிஸ்கட் என்பது நாம் விரும்பி சாப்பிடக்கூடிய நொறுக்கு தீனிகளில் ஒன்றாகும். இதை சாப்பிடுவதில் வயது வித்தியாசமும் எல்லாம் இல்லை.

  காலையில் சாப்பிட நேரம் இல்லாத சிலர் டீ, இரண்டு பிஸ்கட் சாப்பிட்டாலே போதும் என்று நினைக்கின்றார்கள்.  

இளம் வயதில் எந்தப் பிரச்னையும் தெரியாவிட்டாலும் நாளடைவில் வயிற்றுப் புண், செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், உடலில் சர்க்கரை அளவு குறைந்தாலும் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். ஆனால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவது தவறான பழக்கம் ஆகும். 

சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் போன்றவை பிஸ்கெட்டில் அதிகம் இருக்கின்றன.

பிஸ்கட் தயாரிப்பின்போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், மாவு போன்றவற்றை சூடுபடுத்தும்போது உருவாகும் இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதய நோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. 

பிஸ்கட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இதனால், பிஸ்கட் சாப்பிடுவதை குறையாக சொல்லவில்லை. நல்ல பிஸ்கட் மற்றும் தரமான பிஸ்கட்டைப் பார்த்து சாப்பிடுங்கள். அதன்மூலம் உங்களுடைய உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.