Breaking News
recent

வி.களத்தூர் T.N.T.J கிளையின் பித்ரா வசூல் பொறுப்பாளர்கள்...


ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503 ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும். ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும். நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும் அல்லது அதற்கான கிரயமாகும் நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். 

இதுவே ஃபித்ரா எனப்படுகிறது. ஃபித்ராவின் நோக்கம் இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும்,   ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. 

நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும். ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்  பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்க்கு முன் இந்த தர்மத்தை வழங்கிட வேண்டும். பெருநாளைக்கு இரண்டு மூன்று நாளைக்கு முன்னரே வழங்கிடலாம். 

நோன்புப் பெருநாள் தர்மத்தை திரட்டி வசூலிக்கும் பொறுப்பில் அபூ ஹூரைரா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நியமனம் செய்திருக்கிறார்கள். (புகாரி 1511) எனவே, நம்மைத் தேடிவரும் ஏழைகளுக்கு தனிப்பட்ட முறையில் வழங்காமல் கூட்டாகத் திரட்டி வினியோகம் செய்வதுதான் நபிவழியாகும். 

பார்க்க புஹாரி 1503, 1511, 3275, 3211 வசதியுள்ளவர்களிடமும், நடுத்தரவர்கத்தினரிடமும் நோன்புப் பெருநாள் தர்மத்தைத் திரட்டி ஏழைகளுக்கு அதிகநன்மை பயப்பதாகும். ஒவ்வொருவரும் தனித்தனியாக வினியோகம் செய்யும்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அதிகமாக கிடைக்கும் நிலையும், தேவையுடைய பலருக்குக் கிடைக்காத நிலையும் ஏற்படும். ஒருவரே திரும்பத் திரும்பப்பெறும் நிலையும் ஏற்படும். கூட்டாக வசூலித்து ஏழைகளைத் தேடிச் சென்று விநியோகம் செய்வதால் அனைத்து ஏழைகளையும் பெருநாள் தர்மம் சென்றடையும். தேவையான அளவுக்கும் அவர்களுக்குக் கிடைக்கமுடியும். 

இந்த நபிவழியைப் பேனுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு கிளையும் ஃபித்ரா தர்மத்தை தேடிச்சென்று வழங்கும் பொறுப்பைச் செய்து வருகிறது. ஃபித்ராவைத் திரட்டி வழங்கும் பணியில் பல இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர். ஃபித்ரா என்பது மார்க்கக் கடமையாக உள்ளதால் எந்த இயக்கம் ஃபித்ராவைத் திரட்டி ஃபித்ராவை முழுமையாகவும், முறையாகவும், விநியோகிக்கிறதோ அந்த இயக்கத்தில்தான் கொடுக்க வேண்டும். எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு திரட்டப்பட்டது 

என்ற முழு விபரத்தையும், எந்தெந்த ஊருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற விபரத்தையும் வெளியிடாமல் எங்களிடம் கணக்கு உள்ளது வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூருவோரிடமும், விபரம் இல்லாமல் 20 இலட்சம் வந்தது 1000 பேருக்குக் கொடுத்தோம் என்று ஏமாற்றுவோரிடமும். எந்த கணக்கையும் யாரிடமும் தெரிவிக்கத் தேவையில்லை என்று நடந்து கொள்வோரிடமும் ஃபித்ராவைக் கொடுத்தால் ஃபித்ரா கொடுத்த நனமை கிடைக்காது, 

அக்கடமை நிறைவேறாது தெரிந்து இக்கடமையை அலட்சியம் செய்ததாக ஆகிவிடும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினைரப் பொருத்தவரை வரவும், செலவும் முழுமையாக வெளியிடப்படும் என்று உறுதி கூறுகிறோம். ஃபித்ரா கடமையானவர்கள் தங்களின் ஃபித்ரா தொகையை எங்களிடம் தந்தால தாயகத்திலுள்ள எங்களின் தலைமையகத்திற்க்கு அனுப்பி முறையாக வினியோகிப்பதற்க்கு ஏற்பாடு செய்கிறோம். ஃபித்ரா தொகை 20 திர்ஹம் மட்டும் மேற்கண்ட நபி வழியில் நமதூர் லெப்பைக்குடிக்காடு TNTJ கிளை சார்பாக கடந்த 2013 ஆண்டில் மட்டும் ரூபாய் 126300 மதிப்பில் ஃபித்ராவுக்குத் தகுதியான 674 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு 

மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம  1½ கிலோ பிரியாணி அரிசி மற்றும் 100ரூபாய் வீதமாக இந்தத்தொகை நமதூர் (லெப்பைக்குடிக்காடு) மற்றும் நமதூரைச் சுற்றியுள்ள புதுப்பேட்டை, அத்தியூர், வேப்பூர், அரியலூர், திருமானூர், புதுவேட்டக்குடி, குன்னம்,  திருமாந்துறை கைகாட்டி, கீரனூர், ரஞ்சன்குடி, மங்கலமேடு, மேல தைக்கால், கீழ தைக்கால், தேவையூர் மேற்கு மற்றும் கிழக்கு, வாலிகண்டபுரம் மேற்கு மற்றும் கிழக்கு மற்றும் வல்லாபுரம் ஆகிய பகுதிகளில்  லெப்பைக்குடிக்காடு கிளை சகோதரர்கள் மூலம் வீடு தேடிச்சென்று விநியோகிக்கப்பட்டது. 

மேலும் மாவட்டத்தின் வேறுபல ஊர்களுக்கு பிற கிளைகள் மூலமாகவும்; விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டும் உங்கள் மேலான ஃபித்ராவை செலுத்தி அல்லாஹ்வின் அருளைப்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

பித்ரா வசூல் பொறுப்பாளர்கள்  V .களத்தூர் கிளை ஊரில் ஒரு நபருக்கான தொகை ரூபாய் 100 மட்டும் A.முஹம்மது அலி +91 7708650948 K.G.குதுபுல் அலம் +91 9786759986 துபை துபையில் ஒரு நபருக்கான தொகை திர்ஹம் 20 மட்டும் M. சாகுல் ஹமீது  050-1810114 A.சபியுல்லாஹ் +971 504758106 

2013 ஆம் ஆண்டு மாநில தலைமையின் மூலம் விநியோகிக்கப்பட்ட ஃபித்ரா தொகையின் வரவு செலவு விபரம் 





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.