Breaking News
recent

சவூதியர்கள் வெளிநாட்டினரை திருமணம் முடிக்க கடும் நிபந்தனைகள் விதிப்பு.!


வெளிநாட்டு துணையை மணம்புரிய விரும்பும் சவுதி நாட்டவர்கள் யாவரும் சவுதி அரசிடமிருந்து முன் அனுமதி பெற்றே மணமுடிக்க முடியும். 

அதன்படி, ஒரு சவுதி ஆண் வெளிநாட்டு பெண்ணை மணம் முடிப்பதற்கு குறைந்தபட்சம் 40 வயதிலிருந்து 65 வயதிற்குள் மட்டுமே இருக்க வேண்டும். 

அதேபோல் ஒரு சவுதி பெண் வெளிநாட்டு ஆணை மணமுடிப்பதற்கு 35 வயதிலிருந்து 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியடைந்த வெளிநாட்டு பெண்ணையே மணமுடிக்க இயலும். இருவருக்குமிடையே அதிகபட்சம் 30 வருடங்களுக்குள் மட்டுமே வயதில் ஏற்றதாழ்வு இருக்கலாம் என்றாலும் அவர் மாதம் 3000 ரியால் சம்பாதிப்பவராகவும், குடும்பம் நடத்த ஏதுவாக சொந்த வீட்டையோ அல்லது வாடகை குடியிருப்பையோ உடையவராக இருத்தல் வேண்டும்.

தலாக் சொன்ன சவுதி மணமகன் அடுத்ததாக வெளிநாட்டு பெண்ணை மணமுடிக்க விரும்பினால் அவர் 2 வருடம் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும், ஒருவேளை ஏற்கனவே சவுதி பெண்ணுடன் வாழும் மணமகன் இரண்டாவதாக வெளிநாட்டு பெண்ணை மணமுடிக்க விரும்பினால் முதல் மனைவியின் தாம்பத்ய வாழ்க்கை தொடர்பில் மருத்துவ சான்றிதழை சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று இணைக்க வேண்டும். 

மேலும் தன் வெளிநாட்டு மனைவிக்கு சவுதி குடியுரிமை பெறுவதற்காக இந்த திருமணத்தை நடத்தவில்லை எனவும் ஒப்புதல் தர வேண்டும்.

வெளிநாட்டு மணமகனை திருமணம் செய்ய விரும்பினால் இருவருக்கும் அதிகபட்சம் 10 வருட வயது இடைவெளியே இருக்க வேண்டும். அதேபோல் மாற்றுத் திறனாளியாக அல்லது பெற்றோர் யார் எனத்தெரியாத அனாதையாக இருக்கும் சவுதிப்பெண்களுக்கு மட்டும் வெளிநாட்டு ஆணை திருமணம் செய்திட 30 லிருந்து 27 வயது என குறைத்து சமூக நலத்தறை அமைச்சகத்தால் சலுகை அனுமதி வழங்கப்படும்.

ஏற்கனவே திருமணம் முடித்துள்ள வெளிநாட்டு ஆண் சவுதி பெண்களை திருமணம் செய்ய இயலாது அவர்கள் முதல் மனைவியாக சவுதி பெண்களை மணமுடித்திருந்தாலும் சரியே. மேலும் அவர் தன் மீது எத்தகைய குற்றப்பின்னனியும் இல்லை என தனது சொந்த நாட்டிலிருந்தும், சவுதி காவல்துறையிடமிருந்தும் நற்சான்றிதழ் பெற்றுத் தரவேண்டும்.

திருமணம் செய்ய விரும்பும் வெளிநாட்டு ஆண் தான் தொற்று நோயால் அல்லது பரம்பரை நோயால் பாதிக்கப்படவில்லை என்றும் எந்த வெளிநாட்டிலும் ராணுவத்துறையில் பணியாற்றவில்லை என்றும், சவுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர் இல்லை என்றும் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பதுடன் குறைந்தபட்சம் மாதாந்திரம் 5000 ரியால் சம்பாதிப்பவராகவும், முறையான இருப்பிட அனுமதியுடன் குடும்பத்துடன் வசிப்பதற்கான வசதியையும் பெற்றிருக்க வேண்டும்.

வெளிநாட்டு ஆண் நாடாற்றவராக இல்லாமல் எந்த நாட்டிலாவது குடியுரிமையுடன் குறைந்தபட்சம் 1 வருட செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளின் பாதுகாப்பு சோதனைகள் அனைத்திற்கும் ஓத்துழைப்பு தர வேண்டும்.

வெளிநாட்டு ஆணை மணமுடிக்க விரும்பும் சவுதி பெண் தனது வெளிநாட்டு கணவருக்கோ அல்லது அவர் மூலம் பெறப்படும் பிள்ளைகளுக்கோ சவுதி குடியுரிமை கோரமாட்டேன் என எழுத்துபூர்வமாக எழுதித் தர வேண்டும்.

வெளிநாட்டினரை மணமுடிக்க விரும்பும் இருபால் சவுதியினரின் கோரிக்கை மனுக்களையும் ஒரு மாத காலத்திற்குள் பரிசீலித்து முடிவினை அறிவிக்க சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாம்.

சவுதியின் மொத்த மக்கள் தொகையான 28 மில்லியனில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டினர் என்பதும் அவர்களில் மிகப்பெரும்பான்மையினர் கட்டுமானம் மற்றும் சேவை துறைகளிலும் பணிபுரிகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.