TNTJ சார்பில் மாநிலம் முழுவதும் Y.G.மகேந்திரனை கைது செய்ய வேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் தம்முடைய தவறுக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் Y.G.மகேந்திரன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்...
நான் ஏற்கனவே முகநூலில் மன்னிப்பு கேட்டு உள்ளேன். மீண்டும் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். நான் எந்த ஒரு மதத்துக்கும் பாராபட்சமாக இருந்தது இல்லை. என்னுடைய நாடகக் குழுவில் சுமார் 10 ஆண்டுகளாக முஸ்லிம்கள் உள்ளனர். எனவே நான் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல.
கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல், மதம் சார்ந்த அமைப்புகளில் இல்லை. நாடகம் மற்றும் சினிமா போன்றவற்றில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் எப்போதுமே இது போன்று செய்தது இல்லை.
இந்தமுறை கவனக்குறைவால் நடந்துவிட்டது. அதற்காக முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதுக்காக மன்னிப்பு கோருகின்றேன். என்னுடைய இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். ரமலானுக்கு அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள் என மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஒருவர் தம்முடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும்போது மன்னிப்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஸ்லாத்தின் மாண்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக