Breaking News
recent

ஷார்ஜாவில் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் நூலகம்.!


ஷார்ஜாவில் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் வகையில் ‘திவ்யா நூலகம்’ கடந்த டிசம்பர் 2013 முதல் அபு சகரா பூங்கா அருகில் செயல்பட்டு வருகிறது.

’இன்றைய வாசகர் நாளைய தலைவர்’ எனும் வாசகத்தை மையமாகக் கொண்டு இந்நூலகம் செயல்பட்டு வருவதாக நூலகத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யா கேஹானி தெரிவித்துள்ளார். இவர் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். 

தனது குழந்தைகளில் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும், இதற்காக நூல்கள் அதிகமதிகம் வாங்கி வருகிறார். இந்நூல்கள் பிற குழந்தைகளுக்கும் பயனளிக்க வேண்டும் எனும் நன்னோக்கத்துடன் இந்நூலகம் துவக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

துவக்கத்தில் ஆங்கில நூல்கள் மட்டும் இருந்தாலும், விரைவில் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்களும் இந்நூலகத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நூல்களை வாங்கிக் கொடுப்பதில் ஆர்வம் அதிகம் செலுத்தி வந்தாலும் நூலகத்தை தங்களது குழந்தைகள் அதிகம் பயன்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நூலகம் தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது.
மேலதிக விபரங்களுக்கு

06  537 04 08
மின்னஞ்சல் : divyalibrary8@yahoo.com
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.