Breaking News
recent

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத முக்கிய 10 நாடுகள் .. எதுவென்று தெரியுமா?


உலகின் பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு இன்று வரை பாதுகாப்பு இல்லாத சூழலே உள்ளது. பாலின ரீதியாக பாகுபாடு, பெண்சிசுக்கொலை, வன்முறை மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பொதுவான பிரச்னைகளை ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பெண்கள் எதிர்கொள்கின்றனர். இன்னும் சில நாடுகளில் பெண்களின் அங்கங்களை சிதைக்கும் கொடுமையும் நடைமுறையில் உள்ளது.
உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளாகக் கருதப்படும் முக்கியமான 10 நாடுகள் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
1.ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களில் 87 சதவீதம் பேர் கல்வி கற்காதவர்கள் என்று கூறப்படுகிறது. இங்குள்ள பெண்கள் 15 வயது முதல் 19வயதிற்குள் திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்களாம். பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஆப்கன் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. ஆப்கனில் பெண்கள் இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 400 என்ற அளவில் உள்ளது.
2. காங்கோ ஜனநாயக குடியரசு
பெண் சிசுக்கொலை, உள்நாட்டு வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை காங்கோ நாட்டு பெண்கள் எதிர்கொள்கின்றனர். பொது சுகாதாரம் தொடர்பாக அமெரிக்க பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒவ்வொரு நாளும் காங்கோவில் 1150 பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியா
கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பொதுவான பிரச்னைகளை இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 50 லட்சம் பெண்சிசு கொலைகள் நடைபெற்று இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
4.சோமாலியா
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. 4 முதல் 11 வயது வரை உள்ள 9 சதவீதம் பெண்கள் உறுப்புகள் சிதைக்கப்படும் கொடுமைக்கு உள்ளாகுகிறார்களாம். மகப்பேறு இறப்பு சோமாலியாவில் அதிக அளவில் உள்ளதாகவும், அங்கு பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பெண்கள் எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
5. கொலம்பியா
கொலம்பியாவில் தேசிய சட்ட மருத்துவம் மற்றும் ;தடயவியல் அறிவியல் துறை அளித்த அறிக்கையில், கடந்த 2010ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக அதிக அளவில் வன்றைமுறை நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் மீது ஆசிட் வீசியவர் எந்த தண்டனையும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
6. எகிப்து
பாலியல் வன்கொடுமை, உள்நாட்டு வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை எகிப்து பெண்கள் எதிர்கொள்கின்றனர். எகிப்து சட்டம் பெண்களின் உரிமையை பாதுகாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. திருமணம், விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு மற்றும் பரம்பரை உரிமை(நில உரிமை) உள்ளிட்ட உரிமைகள் எகிப்து பெண்களுக்கு தற்போது வரை கிடைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
7. மெக்ஸிகோ
மெக்ஸிகோ அரசியல் சட்ட அமைப்பு, பெண்களுக்கு எதிரான உள்நாட்டு மற்றும் பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பணக்கார பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டின் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஏழைகளின் குற்றச்சாட்டில் நடவடிக்கை இல்லை என்றும், சில பெண்களே இந்த பிரச்னையை கொண்டுவருவதாகவும் மற்றவர்கள் அப்படியே விட்டுவிடுவதாகவும் கூறப்படுகிறது.
8.பிரேசில்
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்குள்ளான 15 வினாடிகளில் ஒரு பெண் பிரேசிலில் கொல்லப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலாத்காரம் மற்றும் உடல்நலன் தொடர்பான சில காரணங்கள் காரணமாக பிரேசிலில் கருக்கலைப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கருக்கலைப்பு செய்தால், மூன்று வருடம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
9.பாகிஸ்தான்
பாகிஸ்தான் குடிமக்கள், முற்றிலும் நியாயமற்ற கடுமையான பழக்கத்தை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. குழந்தை திருமணத்திற்கு மறுத்த பெண் மீது ஆசிட் வீசுவது, மற்றும் பெண்கள் மீது கல்லால் அடித்துக்கொல்வது உள்ளிட்ட வன்முறைகள் நடப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் வரதட்சணை கொடுமையால் நிகழும் மரணம், ஆணவப்படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10. தாய்லாந்து
தாய்லாந்து ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்த போதிலும், பாலியல் தாக்குதல்கள் இந்த நாட்டில் பொதுவான பிரச்னையாக உள்ளது. தாய்லாந்து உள்நாட்டு வன்முறை தகவல் மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், போதைமருந்து, மது உள்ளிட்ட காரணங்களால், பாலின ரீதியான வன்முறைகள் இந்த நாட்டில் பொதுவான பிரச்னையாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.