Breaking News
recent

ஷேக் என்றே அழையுங்கள், இனி நான் ஷுபம் இல்லை - ஐஏஎஸ் தேர்வின் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவர்.!


தனது 21 வயதில் யூபிஎஸ்இ தேர்வுகளில் 361-ஆம் இடத்தை பிடித்து வென்றிருக்கும் மாணவர் அன்சார் அஹமத் ஷேக்.

இதுவரை தனது நண்பர்களுக்கும், அவர் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளருக்கும் ஷுபம் என்றே அறிமுகமானவர் இவர். ஜல்னா ஷெட்கான் என்னும் கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரின் மகன்தான் ஷேக். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்காக பேட்டியளித்திருக்கும் ஷேக், “விடுதிகளில் தங்குவதற்கான தேடலில் இருந்தபொழுது, எனது ஹிந்து நண்பர்களுக்கு சுலபமாக தங்குமிடம் கிடைத்தது. எனக்கு இடவசதி மறுக்கப்பட்டதால், அடுத்த முறை எனது நண்பனின் பெயரான ஷுபம் என்பதை என்னுடைய பெயராக கூறி இடவசதி கிடைக்கப் பெற்றேன். இனி எனது அடையாளத்தை நான் மறைக்கத் தேவையில்லை.

எனது தந்தைக்கு மூன்று மனைவிகள். எனது தாய் அவருக்கு இரண்டாவது மனைவி. எனது இளைய சகோதரன் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டார். எனது சகோதரிகள் இளம் வயதில் திருமணமாகி சென்றுவிட்டார்கள். நான் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றுவிட்டதாக எனது குடும்பத்தினருக்கு அறிவித்தபொழுது அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

மதரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தனது தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக, ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை நோக்கி செயல்பட இருப்பதாகவும், சிறந்த ஆட்சியராகவும் இருப்பதாக உறுதியெடுத்திருப்பதாக கூறுகிறார் அஹமத் ஷேக்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.