Breaking News
recent

கத்தாரில் நோன்பு முழுவதும் அரபிகள் இலவசமாக வழங்கும் இப்தாரின் சோக கதை.!


கட்டாரில் நோன்பு முழுவதும் அரபிகள் இலவசமாக இப்தார் வழங்குவார்கள்.பெரிய "டென்ட்கள்" அடித்து யார் வந்தாலும் உணவு கொடுப்பார்கள்.

அப்படியான டென்ட்களுக்கு நோன்பு திறக்கப் போவதில் அதிகமானவர்கள் இலங்கை மற்றும் பங்களாதேசைச் சேர்ந்தவர்கள்.

இலவசமாக நோன்பு திறக்கக் கிடைத்தாலும், அங்கே சென்று நோன்பு திறப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

ஆறு முப்பதுக்கு அதான் என்றால், குறைந்தது ஐந்து மணிக்கேனும் இப்தார் நடக்கும் இடத்துக்கு சென்றுவிட வேண்டும்.

இல்லாவிட்டால் இடம்கிடைக்காது.

ஒன்றறை மணிநேரம் உணவை முன்னால்  வைத்துக் கொண்டு நோன்போடு கால் கடுக்கக்  காத்திருக்க வேண்டும்.

நாற்பத்தெட்டு பாகை வெயிலில், அதிகமான மக்கள் கூட்டத்தில் என்னதான் ஏ.சி.போட்டாலும் வியர்க்கத் தொடங்கிவிடும்.

அதிகமாகமான இந்தியர்கள்  கட்டாரில்  நோன்பு திறப்பது இப்படித்தான்.

இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு நோன்பை திறக்கத்தான்  வேண்டுமா என்று எணணமும் சில நேரம் வருவதுன்டு.

ஆனால் அந்த இப்தார் இலவசம் என்பதால், ரமழானில் உணவுக்கு செலவாகும் தொகையில், ஒரு சிறிய தொகையேனும் மீதம் பிடிக்கலாம் என்பதுதான் அதிகமானவர்கள் சங்கடங்களைத் தாண்டியும் இந்த இப்தாருக்கு செல்வதின்  மறைமுக நோக்கம்.


ரமழானில் கொஞ்சம் அதிகமாக பணம் அனுப்பினால்தான் வீட்டில் உள்ளவர்கள்  மகிழ்ச்சியாக பெருநாள் கொண்டாடுவார்கள்  என்பதற்காகத்தான் ஒரு சிறிய தொகையை மீதம் பிடிப்பதற்கு பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள் இந்த வெளிநாட்டுத் தொழிலாளிகள்.

உண்மையில் வெளிநாட்டில் இருக்கும்  யாரும் இந்த கஷ்டங்களையும் தியாகங்களையும்  நாட்டில் இருக்கும் யாரிடமும் சொல்வதில்லை.


ஆனால் இந்தமாதிரியான சின்னச் சின்ன தியாகங்களுக்கான மிகப்பெரிய பரிசாக  ஒரு தாயின், மனைவியின்,சகோதரியின் புன்னகையை மட்டுமே எதிர்பார்கிறான் ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.