Breaking News
recent

ஏர் இந்தியா நிறுவனத்தில் 300 விமானப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!


ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 விமானப் பணியாளர்  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Traniee Cabin Crew
காலியிடங்கள்: ஆண்கள் - 75, பெண்கள் - 225
சம்பளம்: மாதம் ரூ.35,075
வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சியுடன் Hotel Management and Catering Technology பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை "AIR INDIA LIMITED" என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. 

டி.டி.யை குழு விவாதம், Personality Assessment தேர்வுகளின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் Personality Assessment தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.