Breaking News
recent

வளைகுடாவில் வசிக்கும் நண்பர்களே உங்களுக்கு தெரியுமா மூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த கலர் எவை? என்று.!

மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள்- வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்று தெரியவந்துள்ளது.
வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின் அளவிலான சிறிய கூடாரங்கள் இருந்த பெட்டகம் ஒன்றுக்குள் மூட்டைப் பூச்சிகள் அனுப்பப்பட்டுள்ளன.
மிகவும் அடர்த்தியான நிறங்களையே அந்த மூட்டைப் பூச்சிகள் தேடிச் சென்றுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், மூட்டைப் பூச்சிகளை ஒழிப்பதற்கான சிறந்த வழிகளை கண்டறியமுடியும் என்று நம்பப்படுகின்றது.

துணிகளிலும், படுக்கைகளிலும், சுவரின் துளைகளிலும், மரப் பொருட்களின் இடுக்குகளிலும் ஒட்டிக்கொண்டு வாழும் இந்த மூட்டைப் பூச்சிகள், சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களை தவறுதலாக சக மூட்டைப் பூச்சிகள் என்று நினைத்துவிடுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.