Breaking News
recent

தி.மு.க. கூட்டணியில் 5 இடம்: முஸ்லிம் லீக் கேட்கும் தொகுதிகள்.!


சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் ‘லீக்’ கட்சி இடம் பெற்றுள்ளது.

முஸ்லீம் ‘லீக்’குடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. அப்போது தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

எந்தெந்த தொகுதி என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் ‘லீக்’ விருப்பம் தெரிவித்து கொடுத்துள்ள 15 தொகுதிகள் பட்டியல் வருமாறு:–

பாளையங்கோட்டை, கடையநல்லூர், திருவாடானை, ராமநாதபுரம், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், பூம்புகார், பாபநாசம், செஞ்சி, விக்கிரவாண்டி, அரவாக்குறிஞ்சி, சிதம்பரம், திண்டுக்கல், மணப்பாறை.

இந்த 15 தொகுதியில் இருந்து 5 தொகுதிகள் முஸ்லிம் ‘லீக்’க்கு ஒதுக்கப்படலாம். அல்லது இந்த பட்டியலில் இல்லாத தொகுதிகள் கூட அந்த கட்சிக்கு கிடைக்கலாம்.

சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் ‘லீக்’ கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் கிடைத்தது. தற்போது கூடுதலாக 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் நாகப்பட்டினம், துறைமுகம், வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.