Breaking News
recent

அபுதாபி இளவரசர் பிப். 10-இல் இந்தியா வருகை.!


ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் (54), மூன்று நாள் பயணமாக புதன்கிழமை (பிப்.10) இந்தியா வர உள்ளார்.

 அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் இந்தியா வரும் ஷேக் முகமது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.

 இதுகுறித்து அபுதாபி செய்தி நிறுவனம் ஒன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில், "இந்தப் பயணத்தின்போது, பிராந்திய, சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்து விவாதித்து இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பாக இளவரசர் ஷேக் முகமது ஆலோசனை மேற்கொள்வார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.