சமையல் எரிவாயு இணைப்பை வங்கி எண்ணுடன் இணைத்து புதுப்பித்தால் மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும்.
இதற்கு அனைவரும் தங்களது சமையல் எரிவாயு இணைப்பை வங்கிக் கணக்கு எண்ணுடன் புதுப்பிக்க வேண்டும்.
அத்துடன் ஆதார் அட்டை எண் இருந்தால் அந்த எண்ணையும் இணைக்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு இத்திட்டத்தை ஆரம்பித்தது.
86 சதவிகிதம் மக்கள் இந்த இணைப்பை புதுப்பித்துவிட்ட நிலையில் மீதமுள்ள மக்களும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அப்படி இல்லை என்றால் 30 சதவிகிதம் மக்கள் சமையல் எரிவாயு மானியங்களை இழக்க நேரிடும் என்றும் அரசு தரப்பு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக