Breaking News
recent

முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் தக்கப்பாடம் புகட்டி விடுவோம் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை.!


முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் ரஷ்யாவுக்கு தக்கப்பாடம் புகட்டி விடுவோம் என்று சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு....

சவூதி அரேபியாவில் அரபு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

அதற்கான காரணம் சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு சிரியாவிலுள்ள சன்னி முஸ்லிம்களை கொன்று வருகிறது.

அதனால் சிரியாவுக்கு மாநாட்டிற்கான அழைப்பு அனுப்பப்படவில்லை, 

அரபு கூட்டமைப்பின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டித்து கடிதம் எழுதினார்.

சிரியாவில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் சூழலில் ரஷ்யா அதிபரின் இந்த கடிதத்திற்கு அரபு உச்சி மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சௌத் அல் ஃபைசல் பேசியபோது... 

மத்திய கிழக்கில் முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாடுவதாகவும், ரஷ்யா தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால்

 சோவியத் ரஷ்யாவுக்கு முஸ்லிம்கள் பாடம் புகட்டியது போல் தற்போதைய ரஷ்யாவுக்கும் முஸ்லிம்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.