Breaking News
recent

குழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூமியாக இருக்கலாம், அவனை பாதுகாக்கும் வானமாக இருக்கலாம், 

செப்பனிடப்பட்ட சூழலாக இருக்கலாம், பார்க்கின்ற கண்ணாக இருக்கலாம், பேசுகின்ற வாயாக இருக்கலாம், பிடிக்கின்ற கையாக இருக்கலாம், நடக்கின்ற காலாக இருக்கலாம், ஏன் சிந்திக்கின்ற மூளையாக இருக்கலாம் அனைத்துமே அவன் கருணையின் வெளிப்பாடே…! இவ்வாறு இறைவனின் அருட்கொடைகளில் மிகப் பிரதானமான ஒன்றுதான் குழந்தைப் பாக்கியம். இதைப்பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.
 
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ
அல்லாஹ்வுக்கே வானங்களினதும் பூமியினதும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். (42:49)


அல்லாஹ் இந்த வசனத்தில் தன்னுடைய விருப்பத்தில்தான் குழந்தைப் பாக்கியம் உண்டு எனக் கூறுகின்றான். குழந்தைப் பாக்கியம் பெற்றவர்கள் அல்லாஹ் என்னை சோதிப்பதற்காக வேண்டி இதை வழங்கி இருக்கின்றான் என்றும், திருமணமாகியும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் அல்லாஹ் என்னை இன்னொரு விதமாக சோதிக்கின்றான் என்றும் ஆழமாக நம்பவேண்டும். 


ஒரு அடியான் இறைவனிடத்தில் கையை ஏந்திவிட்டான் என்றால் வெறும் கையாக திருப்பி அனுப்ப வல்ல நாயன் வெட்கப்படுவதாக நபி(ஸல்) அவர்கள் எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். எலும்புக்கள் கூட பலவீனமடைந்து, தலை முடிகளெல்லாம் நரைத்து, 

மலடியான ஒரு பெண்ணை மனைவியாக வைத்திருந்த நபி ஸகரிய்யா(அலை) அவர்களுக்கும், நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கும் எவ்வாறு அல்லாஹ் பிள்ளைப் பாக்கியத்தை வழங்கினானோ அவ்வாறே எனக்கும் வழங்குவான் என்ற ஆழமான நம்பிக்கை மனதில் ஆலமரம் போல் கிளைவிட்டுப் படரவேண்டும். வைத்தியர்கள் என்னை கைவிட்டாலும், 

முழு உலகும் என்னை மலடி என்று பட்டம் சூட்டினாலும், சொந்தபந்தங்களெல்லாம் சொல்லியும் சொல்லாமலும் எனக்கு ஆண்மையற்றவன் என்று உணர்த்தினாலும், என் ரப்பு என்னை ஒரு போதும் கைவிட மாட்டான், அவன் அன்பானவன், கருணையானவன், வாரிவழங்குபவன், அனைத்துக்கும் சக்தி பெற்றவன் என்ற ஆழமான நம்பிக்கையோடு தினந்தோரும் இறைவனிடம் எமது தேவைகளை முறையிட வேண்டும்.


மூன்று நான்கு மாதங்கள்தான் உங்களால் உயிர் வாழ முடியும் என வைத்தியர்களால் சான்று வழங்கப்பட்ட எத்தனையோ பேர் அதையும் மீறி பல வருடங்கள் வாழ்வதை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 


உங்களுக்கு குழந்தைப் பாக்கியமே இல்லை எனக் கூறப்பட்ட எத்தனையோ பேர் குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை அனுபவப்பூர்வமாகவே அறிந்துவைத்துள்ளோம். இறை நாட்டத்திற்கு முன்னால் அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் வெறும் பூச்சியம் என்பதையல்லவா இவ்வாறான சம்பவங்கள் உணர்த்திநிற்கின்றன. 

எனவே உலகில் எந்த மேதைதான் எனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை எனக் கூறினாலும் இறை அறிவுக்கு முன்னால் அவை வெறும் பூச்சியம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்றாலும் இறைநாட்டம் என்பதை மாத்திரம் நம்பி முடங்கியிருப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. 

மாற்றமாக மனிதனின் முயற்சியும் கட்டாயம் இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் நீண்ட காலம் குழந்தை இல்லதவர்களுக்கு இல்லறவாழ்வோடு தொடர்பான சில அறிவியல் வழிகாட்டுதல்களை வழங்குவது பொருத்தம் என நினைக்கின்றேன்.


குழந்தைப் பாக்கியம் இல்லாமைக்கு பல காரணங்கள் காணப்படலாம். உடலியல் ரீதியான குறைபாடாகக் காணப்படுகின்ற மலட்டுத்தன்மை, ஆண்மை இன்மை என்பன மிக மிகச் சொற்பமானவர்களுக்கே காணப்படும். நிலைமை இவ்வாறு இருக்க ஏன் அண்மைக்காலமாக குழந்தை அற்றவர்களின் தொகை அதிகரித்துச்செல்கின்றது??? 


இதற்கான பதிலை ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் “ இல்லற வாழ்வின் சூச்சுமத்தை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை” எனக் கூறலாம். அது என்ன சூச்சுமம் என யோசிக்கின்றீர்களா?? அதை புரிந்து கொள்ள கருவறையின் சில அடிப்படை செயற்பாடுகளை புரிந்துகொள்ளவேண்டும்.


ஒரு பெண்ணுக்கு 3 இலட்சம் சினைப்பைகள் காணப்படுகினறது. இந்த 3 இலட்சத்தில் ஒரு மாதத்திற்கு 30 சினைகள் முட்டைகளாக உருவாகத்தயாராகின்றது. இந்த 30 உம் பலத்த போட்டியிட்டு கடைசியில் 29 தோல்வியடைந்து ஒன்றே ஒன்று கருமுட்டையாக வெளியாகும்.


கரு முட்டை>>

இக்கரு முட்டையானது கருவறை வாயிலில் தனது ஜோடியான ஆணின் உயிரணுக்காக காத்திருக்கும். இக் கருமுட்டையின் வாழ்நாள் வெறுமனே 24 மணித்தியாலங்களாகும். இவ்வாறு ஒரு நாள் முழுவதும் காத்திருக்கும் கருமுட்டையானது தனக்கு ஒரு ஜோடி கிடைக்கவில்லை என்பதால் உடனே இறந்துவிடும்(கிடைத்துவிட்டால் பெண் கர்ப்பமாகி விடுவாள்). 


முட்டை இறந்துவிட்டதை கருவறை அறிந்த உடனே இனி எனக்கு கருவை சுமக்கும் சந்தர்ப்பம் இல்லை என ஏற்கனவே கருவை சுமக்கவேண்டும் என்ற கனவில் செய்துவைத்திருந்த அனைத்து ஏற்பாடுகளையும் கரைத்து கருவறையை விட்டும் வெளியேற்றிவிடும். இவ்வாறு கருவறை வெளியேற்றும் கழிவுகள்தான் மாதவிடாய் என அழைக்கப்படுகின்றது. 

இந்த அடிப்படையில் பார்க்கும்போது ஒரு பெண் ஒரு மாதத்தில் வெறுமனே ஒரே ஒரு நாள்தான் கருவைச் சுமக்கத் தயாராக இருக்கின்றாள். இந்த நாளில் தம்பதியினர் இல்லறத்தில் ஈடுபட்டால்தான் குழந்தை உருவாக்கம் சாத்தியமாகின்றது. 

இந்த நாளை எவ்வாறு கண்டுபிடிப்பது?? இது மாதத்தின் எத்தனையாம் நாள்?? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத்தான் நாம் இல்லற வாழ்வின் சூச்சுமம் எனக் கூறினோம். ஆம் இந்த சூச்சுமத்தை அறிந்துகொள்வோம்..


ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஆரம்பமாகி பத்து நாட்களுக்கு கருமுட்டை உருவாவதில்லை. எனவே இந்த நாட்களில் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. சரியாக 14 ம் நாள் கருமுட்டை தயாராக இருப்பதாக ( முறையாக மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு ) வைத்தியர்கள் கூறுகின்றார்கள். 


எனவே மாதவிடாய் ஆரம்பமாகி 14ம் நாள் பெண் முழுமையாக கருத்தரிக்க தயாராக இருப்பதால் இதுதான் இல்லற வாழ்வின் சூச்சுமம். தம்பதியினர் 13,14,15 ம் நாட்களை கணக்கிட்டு இல்லறத்தில் ஈடுபடுவதன் மூலம் இன்ஷா அல்லாஹ் இறை அருளைப் பெற்றுக்கொள்ளலாம். 14 ம் நாளுக்கு பின் முட்டை இறந்து விடுவதால் கருத்தரிக்க வாய்ப்பு இல்லை. 

எமது சமுதாயத்தில் அதிகமானவர்கள் வெளிநாடுகளிலும், வெளிஊர்களிலும் வேலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறானவர்கள் “நான் வாராவாரம் வீட்டுக்குப் போகின்றேன் என்றாலும் எனக்கு குழந்தை இல்லையே” என ஏங்குவதை பார்க்கின்றோம். இவ்வாறானவர்கள் கட்டாயம் நாட்களைக் கணக்கிட்டு தமது விடுமுறையை அமைத்துக்கொள்ள வேண்டும். 


இதுவரை கூறிய விடயங்கள் அனைத்துமே உடல்ரீதியாக குறைபாடுகள் இல்லாதவர்களுக்கான வழிகாட்டுதலாகும். குழந்தை இல்லாதவர்களில் 90% மானவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்தான். இது தவிர்ந்த இன்னுமொரு வகையினரும் உள்ளனர். 


சில ஆய்வுகள் இலட்சத்தில் ஒருவருக்கு உயிரணுவில் சிவப்பணுக்கள் இருப்பதில்லை எனக் கூறுகின்றது. இவ்வாறு சிவப்பணுக்கள் இல்லை என்றால் குழந்தைப் பாக்கியம் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் வைத்தியர்களை அணுகி எமது உயிரணுக்களை பரிசோதித்துப் பார்க்கலாம். Normal என முடிவுவந்தால் விஞ்ஞானப் படி குழந்தைப்பாக்கியம் உண்டு என அர்த்தம் Nil என வந்தால் வைத்தியத்தில் இதற்கு தீர்வு இல்லை என அர்த்தம். 

நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று இறை நாட்டத்துக்கு முன்னால் அனைத்தும் பூச்சியமாகும். கடைசிவரை இறை அருளில் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. எப்போதுமே அல்லாஹ்வை சார்ந்து, அவனிடம் கையேந்தி வாழக்கூடியவர்களாக அல்லாஹ் எம்மை ஆக்குவானாக
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.